அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸ் வியாதிக்கு சல்ஃபாசலசின் (Sulfasalazine) மருந்துகளின் செயல்பாடு பற்றி ஆராய நவம்பர் 2013 வரை மேற்கொள்ளப்பட்ட 895 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 21 ஆய்வுகள் கண்டறியப்பட்டது. அந்த முடிவுகளின் சுருக்கம் பின்வருமாறு.
அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெறக்கூடியவை என்று திறனாய்வு கூறுபவை:
- சல்ஃபாசலசினை போலி மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில், வலி, நோய் செயல்பாடு, உடற்சார்ந்த செயல்பாடு, முதுகுத்தண்டின் அசைவு, மருத்துவர் மற்றும் நோயாளியின் முழுமையான மதிப்பீடு போன்ற விளைவுகளில் சிறிய அளவிலான அல்லது எந்த வேறுபாடும் காணப்படவில்லை.
- முதுகுத்தண்டின் ஊறுபாட்டை எக்ஸ்-கதிர் மற்றும் காந்த ஒலி வரைவினால் அளவிடாததால், சல்ஃபாசலசின் ஊறுபாட்டை தாமதப்படுத்துகிறதா என்று தெரியவில்லை.
- சல்ஃபாசலசினை உட்கொண்டவர்களுக்கு வயிற்று கோளாறு, தோலில் சினைப்பு அல்லது எதிர் விளைவு மற்றும் வாய் புண் போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
- போலி மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில் பக்க விளைவுகளின் காரணமாக சல்ஃபாசலசினை உட்கொள்வதை பலர் நிறுத்திக்கொண்டனர்.
- அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிசுக்கு சல்ஃபாசலசினின் நன்மை, தீமை பற்றி போதுமான ஆதாரங்கள் இல்லாததால், மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸ் என்றால் என்ன?; சல்ஃபாசலசின் என்றால் என்ன?
அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸ் முதுகெலும்பின் மூட்டு மற்றும் தசைநார்களை பாதிக்கும் ஒரு வகையான மூட்டுவாதம் ஆகும். இது தோள்கள், இடுப்பு, அல்லது மற்ற மூட்டுகளையும் பாதிக்கும். இது முதுகு மற்றும் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் தன்மையை உடையதாகும்.
இந்த திறனாய்வின் முக்கிய முடிவுகள்
வலி
- 3 முதல் 36 மாதங்களுக்கு ஆறுதல் மருந்தை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் சல்ஃபாசலசினை எடுத்தவர்கள் 0 to 100 என்ற அளவுகோலில் 3 புள்ளிகள் குறைவாக உள்ளதாக மதிப்பீடு செய்தனர் (3% முழுமையான முன்னேற்றம்).
- 3 முதல் 36 மாதங்கள் வரை சல்ஃபாசலசினை உட்கொண்டவர்கள் 0 to 100 என்ற அளவுகோலில், தங்கள் வலியை 47 என்று மதிப்பீடு செய்தனர்.
- 3 முதல் 36 மாதங்கள் வரை ஆறுதல் மருந்தினை உட்கொண்டவர்கள் 0 to 100 என்ற அளவுகோலில், தங்கள் வலியை 50 என்று மதிப்பீடு செய்தனர்.
பாத் ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் நோய் செயல்பாடு குறியீடு (BASDAI)
ஆய்வுகளில் இந்த விளைவு அளவிடப்படவில்லை.
ஆய்வுகளில் இந்த விளைவு அளவிடப்படவில்லை.
ஆய்வுகளில் இந்த விளைவு அளவிடப்படவில்லை.
பாத் ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் அளவியல் குறியீடு (BASMI)
ஆய்வுகளில் இந்த விளைவு அளவிடப்படவில்லை.
கதிர்வரைவுகளில் முன்னேற்றம்
ஆய்வுகளில் இந்த விளைவு அளவிடப்படவில்லை.
கேடான விளைவுகளால் பின்வாங்கியவர்கள்
- ஆறுதல் சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், கேடான விளைவுகள் காரணமாக சல்ஃபாசலசினை உட்கொண்டவர்கள் 23 பேர் அதிகமாக பின்வாங்கினர்.
- கேடான விளைவுகள் காரணமாக சல்ஃபாசலசினை உட்கொண்டவர்களில் நூற்றில் 13 பேர் வெளியேறினர்.
- கேடான விளைவுகள் காரணமாக போலி மருந்தினை உட்கொண்டவர்களில் நூற்றில் 9 பேர் வெளியேறினர்.
தீவிரமான கேடான விளைவுகள்
- 469 பேரில் ஒருவர் மட்டும் கடுமையான விளைவுகள் காரணமாக சல்ஃபாசலசின் உட்கொள்வதை நிறுத்திக்கொண்டார்.
மொழிபெயர்ப்பு: கோ. ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு