உடலியல் செயல்பாட்டின் அதிகரிக்கும் விகிதங்களுக்கு விளையாட்டுத் துறை ஒரு முன்னுரிமையான பகுதியாக பார்க்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு விகிதங்கள் குறைவாகவும், மற்றும் வயதாவதுடன் நலிவடைவதாகவும், மற்றும் தாழ்ந்த சமூக-பொருளாதார மற்றும் சிறுபான்மை குழுக்களில் கம்மியாகவும் இருப்பதாக காட்டப்படுள்ளது. விளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு மற்றும் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதற்கும் விளையாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடிய மிக திறன் வாய்ந்த தலையீடுகளை தீர்மானிப்பது முக்கியமாகும். இந்த முறைப்படுத்தப்பட்ட இலக்கிய திறனாய்வில், விளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் தலையீடுகளின் விளைவுகளை மதிப்பிட்ட எந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.