மார்பக புற்று நோய்க்குத் துணை சிகிச்சை பெறும் பெண்களுக்கான உடற்பயிற்சி

இங்கு பிரச்சினை என்ன?

கடந்த காலங்களில், புற்று நோயாளிகள் பொதுவாக ஓய்வு எடுக்கவும் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுவர். அளவுக்கு அதிகமான ஓய்வு மற்றும் மிக குறைவான உடல் செயல்பாடுகள் தசை செயலிழப்புக்கு வகை வகுக்கலாம் என்பது நமக்குத் தெரியும். இது பெண்களின் தேக ஆரோக்கிய அளவைக் குறைக்கும். மற்றும் அவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் செய்வதை தடுக்கலாம். சோர்வு, மனச்சோர்வு மற்றும் குறைக்கப்பட்ட மன செயல்பாடுகள், உதாரணமாக விஷயங்களை நினைவில் வைத்தல் அல்லது கவனமாக இருத்தல் போன்ற தங்களது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பக்க விளைவுகளைப் பெண்கள் சந்தித்தனர்.

அது ஏன் முக்கியம்?

மீண்டும் வேலைக்குச் செல்வது மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள் இடையூறு விளைவிக்கும். பக்க விளைவுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்வது முக்கியமாகும்.

வேதிச்சிகிச்சை அல்லது ஊடுகதிர்ச் சிகிச்சையின்போதோ அல்லது அவ்விரு சிகிச்சைகளின்போதோ உடற்பயிற்சி செய்வது சிகிச்சை பக்க விளைவுகளைக் குறைக்க உதவியதா என்று நாங்கள் கேட்டோம். ஆராய்ச்சிகளில் சேர்க்கப்பட்ட பக்க விளைவுகளில் உடல் அசதி, மனச்சோர்வு, தேக ஆரோக்கியம் மற்றும் மன செயல்பாடு குறைதல் போன்றவை அடங்கும். ஆரோக்கியம் சார்ந்த, புற்றுநோய்க்கு உரித்தான மற்றும் புற்றுநோய் பாதித்த இடம் சார்ந்த வாழ்க்கை தரம் போன்ற பொதுவான தாக்கம் பற்றி நாங்கள் ஆராய்ந்தோம். புற்றுநோய் நோயாளிகளின் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி, உதாரணமாக வலி அல்லது குமட்டுதல் போன்றவற்றை புற்றுநோய் சார்ந்த- வாழ்க்கை தரத்திற்கான வினாப்பட்டியல் கேட்கும். மார்பக புற்றுநோய் உள்ள பெண்களிடம், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் , உதாரணமாக மார்பக அறிகுறிகள் அல்லது உடற்பிம்பம் போன்றவை பற்றி வினவும் வினாப்பட்டியல் வாயிலாக புற்றுநோய் பாதித்த இடம் சார்ந்த- வாழ்க்கை தரம் அளவிடப் படுகிறது. நம்பக தன்மை உள்ள வினாப்பட்டியல்களை (questionnaires) மட்டுமே நாங்கள் சேர்த்துக் கொண்டோம்.

2626 பெண்கள் கொண்ட 32 ஆராய்ச்சிகளை நங்கள் கண்டறிந்தோம். மார்ச் 2015 வரை வெளியிடப்பட்ட ஆய்வுகள் இத்திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. சாத்தியமான அனைத்து பக்க விளைவுகளையும், எல்லா ஆராய்ச்சிகளும் கருத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மற்றும் களைப்பை சற்றே குறைக்கும் என்று இந்த ஆய்வுகளின் ஒருங்கிணைந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. தேக ஆரோக்கிய மேம்பாடு புற்றுநோய் சார்ந்த- வாழ்க்கை தரம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றில் அநேகமாக சற்றே அல்லது எந்த ஒரு மேம்பாடும் ஏற்படுத்தாது என்றும் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. ஆதாரங்களின் தரம் குறைவாக இருந்தபோதிலும் உடற்பயிற்சியால், மன செயல்பாடு மற்றும் புற்றுநோய் பாதித்த இடம் சார்ந்த- வாழ்க்கை தரம் சற்றே மேம்பாடு அடையலாம். இந்த விளைவுபயன்களுக்கு ஆதாரங்களின் தரம் குறைவாக இருந்தது. இது ஆரோக்கியம் தொடர்பான- வாழ்க்கை தரத்தில் சற்றே அல்லது எந்த ஒரு மேம்பாடும் ஏற்படுத்தாது, இருப்பினும் இந்த விளைவுபயனுக்கான ஆதாரங்களின் தரம் குறைவாகவே இருந்தது. சிறிய வேறுபாடுகளைக் கூட அறிய போதுமான பங்கேற்பாளர்கள் பல ஆய்வுகளில் இல்லாததால்ஆய்வுகளின் தரம் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது மற்றும் எந்த பங்கேற்பாளர்கள் கட்டுப்பாட்டு குழுவில் இருந்தனர் என்று விளைவுபயன் அளவிட்டவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அதன் முடிவுகள் சார்புடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக, உடற்பயிற்சிகள் பெண்களுக்கு எந்தவிதமான தீங்கும் விளைவிக்கவில்லை. கை அல்லது கால்களில் அசெளகரியம் அல்லது வலியை மிக சில பெண்களே அனுபவித்தனர்.

இதற்கு என்ன அர்த்தம்?

புற்றுநோய் சிகிச்சையின் போது சோர்வை குறைக்கவும் மற்றும் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உதவும் என்று தோன்றுகிறது. புற்றுநோய்-சார்ந்த வாழ்க்கை தரம் மற்றும் உளச்சோர்வு போன்றவற்றை இது சிறிய அளவு மாற்றலாம் அல்லது எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மற்ற பக்க விளைவுகளை குறைக்க இது உதவுமா என்பது தெரியவில்லை. உடற்பயிற்சி எந்த அளவிற்கு இந்த பக்க விளைவுகளை மற்றும் இதர பக்க விளைவுகளின் தாக்கத்தைக் குறைக்கும் என்ற கேள்விக்குத் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்பது ஆராய்ச்சிகள் பதில் அளிக்க உதவும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information