மல்டிபல் ஸ்கலோரோசிஸ் கொண்ட மக்களில், இணக்கமில்லா கை கால் இயக்கத்திற்கு (அடக்ஸ்சியா) அல்லது நடுக்கத்திற்கான வேறுப்பட்ட சிகிச்சையின் பயன்பாடு

எம்எஸ் என்பது, இளம் மற்றும் நடுவயது வந்தவர்கள் இருவரையும் குறிப்பிட்டு பாதிக்கும் மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட நோயாகும். அடக்ஸ்சியா-வை உள்ளடக்கிய பல்வேறு விதமான அறிகுறிகளை அது உண்டாக்கும்.

இந்த அறிகுறிகளுக்கு உதவ, பிசியோதெரபி, நரம்பு அறுவை மருத்துவம், மற்றும் கானபிஸ் சாரம், ஐசோனியாசிட் அல்லது பாக்லோபென்-னை கொண்டிருக்கும் வாய்வழி மருந்துகள் போன்ற அநேக வெவ்வேறு விதமான சிகிச்சைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், மருத்துவ இலக்கியத்தில் ஒரு தேடலை நடத்தினர் மற்றும் 59 ஆய்வுகளிலிருந்து, இந்த திறனாய்வில் சேர்ப்பதற்கு தேவையான குறைந்த பட்ச செயல்முறையியல் தரத்தின் அடிப்படையை சந்தித்த 10 ஆய்வுகளை மட்டுமே கண்டனர். இந்த ஆய்வுகள், மொத்தம் 172 அடக்ஸ்சியா கொண்ட எம்எஸ் நோயாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தின. எந்த சிகிச்சையும் (மருந்துகள், பிசியோதெரபி, அல்லது நரம்பு அறுவை மருத்துவம்) அடக்ஸ்சியா அல்லது நடுக்கத்தில் நீடித்த மேம்பாட்டினை அளித்தது என்பதை எடுத்துரைக்க போதுமான ஆதாரம் இல்லை என இந்த திறனாய்வு கண்டது. அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information