டவுன் ஸின்ட்ரோம் கொண்ட வயது வந்தவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டங்கள்

டவுன் ஸின்ட்ரோம் கொண்ட அநேக மக்கள், குறைவான தசை வலிமை, தசை கொள்ளளவு, மற்றும் உயர் உடல் கொழுப்பு சதவீதம் ஆகியவற்றை கொண்டிருப்பர். இதனால், இதயநாள ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருப்பர். வெவ்வேறு விதமான ஆரோக்கியமான மக்களில், உடல் மற்றும் உளச்சமூக நலத்தை மேம்படுத்துவதற்கு உடற்திறன் பயிற்றுவிப்பு பரிந்துரைக்கப்பட்டாலும், டவுன் ஸின்ட்ரோம் கொண்ட வயது வந்தவர்களில் ஏரோபிக் உடற்பயிற்சியின் திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய தகவல் இல்லை. இந்த திறனாய்வு வெறும் மூன்றே சிறிய சீரற்ற சோதனைகளை அடையாளம் கண்டது. ஏரோபிக் உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டங்களுக்கு பிறகு, வேலை திறன் அம்சங்கள் (உதாரணத்திற்கு, உயர்பட்ச சோதனை நேரம், உடற்பயிற்சி சோதனைக்கு பின்னான உயர்பட்ச தூரம்) மட்டுமே மேம்பட்டன என முடிவுகள் காட்டுகின்றன. டவுன் ஸின்ட்ரோம் கொண்ட வயது வந்தவர்களில், உளச்சமூக அம்சங்களுக்கான சாத்தியமான நன்மைகளை மதிப்பிட அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எதிர்கால சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information