மாற்று சிறுநீரகம் பெற்று, அதின் நிராகரிப்பை தவிர்ப்பதற்கு வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் மக்களில், சிறு நீரக பாதிப்பு மற்றும் இதய வியாதியின் அபாயத்தை குறைப்பதற்கு மீன் எண்ணையை பயன்படுத்துவது ஏதேனும் நன்மை அல்லது தீமை விளைவிக்குமா என்பதை ஆராய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. 15 ஆய்வுகளிலிருந்த தகவல் பயன்படுத்தப்பட்டது. மீன் எண்ணெய்கள் உயர் அடர்த்தி கொழுப்பு கொலஸ்ட்ரால் மற்றும் டையாஸ்டோலிக் இரத்த அழுத்தம் ஆகியவற்றில் சிறிது மேம்பாட்டை அளித்தது என்று அவை காட்டின. இந்த ஆய்வுகள், மீன் எண்ணெய்கள் மற்றும் போலி சிகிச்சையை பெற்ற மக்களிடையே, இறப்பு, இதய வியாதி, மாற்று சிறு நீரக நிராகரிப்பு அல்லது சிறு நீரக செயல்பாட்டில் உள்ள வித்தியாசங்களை பற்றி போதுமான விவரம் அளிக்கவில்லை. மீன் எண்ணையை உட்கொள்ளுவதால் எந்த பாதகமான விளைவுகளும் இருப்பதாக தெரியவில்லை. சிறு நீரக மாற்றிற்கு பின் மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வது, இதய வியாதியின் அபாய காரணிகளில் ஒரு சிறியளவு மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். இதய வியாதி அல்லது சிறு நீரக செயல்பாடு குறைவு ஆகியவற்றை தடுப்பதற்கான நன்மையான விளைவு பற்றி போதுமான விவரம் அளிக்கப்படவில்லை. மீன் எண்ணையின் சீரான பயன்பாட்டை பரிந்துரைப்பதற்கு முன் சிறப்பான பெரியளவு ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்