ஒருபக்க வெஸ்டிபுலார் (உள் காது உறுப்பு) பிறழ்ச்சி உடைய நோயாளிகளுக்கு தலை கிறுகிறுப்பு, சமநிலை இழப்பு மற்றும் உடல் இயக்கம் மேம்படுத்த வெஸ்டிபுலார் புனர்வாழ்வு சிகிச்சை.

பின்புலம்

வெஸ்டிபுலார் (vestibular) பிறழ்ச்சி கொண்டவார்கள் பெரும்பாலும் தலை கிறுகிறுப்பு மற்றும் பார்வை குறைபாடு, சமநிலை இழப்பு அல்லது நடமாட்டத்தில் பிரச்சனைஆகியவற்றை அனுபவிக்கின்றனர். ஒரு பக்க மற்றும் மூளைக்கு வெளியே (உள் காது பகுதியில்) உள்ள வெஸ்டிபுலார் உறுப்பை மட்டும் பாதிக்கும் நோய்கள் ஒருபக்க மற்றும் புற வெஸ்டிபுலார் குறைபாடுகள் (unilateral and peripheral vestibular disorder UPVD) என்றழைக்கப்படுகிறது. தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்பு (paroxysmal positional vertigo (BPPV)), வெஸ்டிபுலார் நரம்பு வீக்கம், சிக்குபுழையழல், ஒருதலை மெய்நேர்ஸ் நோய் அல்லது சிக்குழையெடுப்பு அல்லது அகுவஸ்டிக் நரம்புக்கட்டி நீக்கம் போன்ற அறுவை சிகிச்சையை தொடர்ந்து வெஸ்டிபுலார் சிக்கல்கள் ஆகியவை இந்த கோளாறுகளின் உதாராணங்கள். உடல் இயக்கம் சார்ந்த சிகிச்சைமுறைகுள் அடங்கும் வெஸ்டிபுலார் புனர்வாழ்வு சிகிச்சை, இந்த கோளாறுகளுக்கு அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது. நோய் அறிகுறிகளை தூண்டி அதன்மூலம் உணர்சிநீக்க கற்றல், ஒருங்கிணைந்த கண் மற்றும் தலைஅசைத்தல், சமநிலை மற்றும் நிலையை பற்றி அறிந்து அதை சமாளிக்க அல்லது மேலும் நன்றாக செயல்பட கற்றல் ஆகியவைகளை வெஸ்டிபுலார் புனர்வாழ்வில் ஓரு முக்கிய அங்கமாக இருக்கும்.

ஆய்வுகளின் பண்புகள்

வெஸ்டிபுலார் கோளாறுகளுக்கான புனர்வாழ்வு சிகிச்சையின் பயன்களை, ஆராயும் (2441 பங்கேற்பாளர்கள் கொண்ட) 39 சமவாய்ப்பிட்டு கட்டுபடுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். அனைத்து ஆய்வுகளிலும் ஒரு வகையான வெஸ்டிபுலார் புனர்வாழ்வு சிகிச்சை பயன்படுத்தப்பட்டது மற்றும் சமூகத்தில் நோய்குரியுடன் மற்றும் UPVD bதிக்கப்பட்டவர்கள் என்று உறுதிச் செய்யப்பட்ட பெரியவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிற சிகிச்சை முறைகளுடன் (எடுத்துகாட்டாக, மருந்து, வழக்கமான சிகிச்சை அல்லது பங்கேற்பில்லா உத்திகள் (passive maneuvers)), கட்டுப்பாடு அல்லது மருந்துபோலி சிகிச்சை அல்லது இதர வகையான புனர்வாழ்வுடன் போன்ற பலமருதுவமுரைகளுடன் வெஸ்டிபுலார் புனர்வாழ்வு சிகிச்சையுடன் ஆராய்ச்சிகளில் ஒப்பிடப் பட்டிருந்த்தது. வெவ்வேறு விளைவுபயன் அளவுமுறைகள் பயன்படுத்துவது ஆய்வுகள் வேறுபாட்டின் மற்றொரு காரணமாக இருந்தது (உதராணமாக கிறுகிறுப்பு, சமநிலை, பார்வை அல்லது நடக்கும் திறன் அல்லது தினசரி வாழ்வில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் பற்றி அறிவித்தல்).

முக்கிய முடிவுகள்

ஆய்வுகளிடையே வேறுபாடு காரணமாக சில தரவுகளே தொகுப்பாக்க (இணைக்க) முடிந்தது. வெஸ்டிபுலார் புனர்வாழ்வு, கட்டுப்பாடு அல்லது போலி சிகிச்சைகளை காட்டிலும் கிறுகிறுப்பு மேம்படுத்த மற்றும் வாழ்க்கை பல செயல்களில் பங்குபெறுவதை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று நான்கு ஆய்வுகளின் ஒருங்கிணைக்கப்பட்டமுடிவுகள் காண்பித்தன. இரண்டு ஆய்வுகள் முடிவுகள் ஒருங்கிணைத்தில் வெஸ்டிபுலார் புனர்வாழ்வு நடை திறனை மேம்படுத்தும் என்று காண்பித்தது. சமநிலை, பார்வை மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் போன்றவற்றை மேம்படுத்த வெஸ்டிபுலார் புனர்வாழ்வு உதவும் என இதர ஒற்றை ஆய்வுகள் கண்டன. தீங்கற்ற எதிர்பாரா நிலை தலைசுற்றல்(BPPV) உடைய குறிப்பிட்ட மக்கள் குழு இந்த கண்டுபுடிப்புபுகளுக்கு விதிவிலக்காக இருந்தது, அவற்றில் வெஸ்டிபுலார் புனர்வாழ்வை குறிப்பிட்ட உடல் மருநிலைகொள்ளல் உத்திகளில் குறுகிய காலத்திற்கு தலைசுற்றல் அறிகுறியை குறைப்பதில் பயனுள்ளதாக இருந்தது என்று காட்டியது. இருப்பினும் மற்றஆய்வுகளில் வெஸ்டிபுலார் புனர்வாழ்வை அந்த உத்திகளுடன் இணைப்பதால் நீண்டகால செயல்பாட்டு மீட்சியை மேம்படுத்த பயனுள்ளதாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. எந்த ஒரு புனர்வாழ்வு மறுத்துவதிற்கும் பக்ககவிளைவுகள் அறியப்படவில்லை. சாதகமான விளைவுகள் மறையவில்லை என்று தொடர் கண்காணித்த (3 முதல் 12 மாதங்கள் பின்) ஆராய்ச்சிகள் காண்பித்தன. பல்வேறு புனர்வாழ்வு முறைகளில், ஒன்று மற்றொன்றை விட மேன்மையானது என்று எந்த ஆதாரமும் இல்லை. ஒருபக்க புற வெஸ்டிபுலார் பிறழ்ச்சி(UPVD) விளைவாக தலைச்சுற்று மற்றும் செயல்பாட்டு இழப்பு உடைய மக்கள்களுக்கு வெஸ்டிபுலார் புனர்வாழ்வு பொதுவாக சாதகமாக பயனளிக்கும் என்று வளர்த்துவரும் ஆராய்ச்சி ஆதாரங்கள் கூறுகிறது.

சான்றுகளின் தரம்

பொதுவாக ஆய்வுகளின் மிதமான முதல் உயர்ந்த தரம்கொண்டிருந்தன, ஆனால் அவற்றின் செய்முறைகளை வேறுபட்டது. இந்த ஆதாரங்கள் 18 ஜனவரி 2014 தேதி வரை தற்போதையவை

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ. நவீன் குமார், வை. பிரகாஷ், க. ஹரிஓம் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information