கார் பயன்பாட்டை குறைக்க மற்றும் நடத்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற அதிக இயக்கமுடைய மற்றும் நீடிக்கக்கூடிய பயணத்தை மேம்படுத்த பயண திட்டங்கள் நோக்கம் கொள்ளும். பணியிடங்கள் அல்லது பள்ளிகள் போன்ற நிறுவனங்களுக்கான பயண திட்டங்களை இந்த திறனாய்வு கவனத்தில் கொள்கிறது. நெருக்கடியை குறைக்கவும் மற்றும் சுற்றுசூழலுக்கு ஒத்திருப்பதற்கும் போன்ற காரணங்களுக்காக பயண திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் பயண திட்டங்கள்ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் பொதுவாக கோரப்படுகிறது. இந்த திறனாய்வில் நாங்கள் 17 ஆய்வுகளை உள்ளடக்கினோம். பணியிடத்தில் நடப்பதை அதிகரிப்பது, மனநலம் உட்பட ஆரோக்கியத்தின் சில அம்சங்களை மேம்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு கண்டது. ஆனால் வேறு எந்த ஆய்வுகளும் ஆரோக்கிய விளைவுகளை நேரடியாக மதிப்பிடவில்லை. அனைத்து 17 ஆய்வுகளும் பயணத்தினுடைய மாற்றங்களை கண்டது. பயணத் திட்டங்கள், நடத்தலை அதிகரித்தன என்று சிலவை கண்டாலும், பிற ஆய்வுகள் அவற்றை காணவில்லை. ஒட்டுமொத்தமாக, பயண திட்டங்கள், மக்கள் பயணம் செய்கிற முறையை மாற்றுவதில் திறன் உள்ளவையா அல்லது ஆரோக்கியத்தை மேம்படுத்துமா என்பதை அறிய போதுமான ஆதாரம் இல்லை. தற்போது, சிறப்பாக-வடிவமைக்கப்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகளில் நிறுவன பயண திட்டங்களுக்கு இடமளிக்க பட வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.