திறனாய்வு கேள்வி
ஆரோக்கியமான மக்களை ஹெளிகோபக்டேர் பைலோரி தொற்று இருக்கிறதா என்று வழக்கமாக பரிசோதனை செய்வது மற்றும்பாதித்தவர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை அளிப்பது புதியஇரைப்பை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமா.
பின்னணி
எச் பைலோரி தொற்று உள்ளவர்களுக்குத் தொற்று பாதிக்கப்படாதவர்களை விட இரைப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரணத்திற்காக, எச் பைலோரி தொற்று மனிதர்களுக்குப் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை (கார்சினோஜெனிக்) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பலர் இரைப்பை புற்றுநோயினால் இறக்கிறார்கள், ஏனெனில் பாதிக்கப்பட்டவர் ஒரு மருத்துவரை அணுகுகிற நேரத்தில், அவருடைய நிலைமை பெரும்பாலும் முற்றியநிலையில் இருக்கும். எனினும், எச் பைலோரி தொற்றிற்கு ஒரு வாரம் நுண்ணுயிர்க் கொல்லி எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சுலபமாக சிகிச்சை அளிக்கலாம்.
ஆய்வு பண்புகள்
டிசம்பர் 2013 வரை நடத்தப்பட்ட தேடலில் 6 சோதனைகள் (6497 பங்கேற்பாளர்கள், குறைந்த பாரபட்ச சாத்தியம் கொண்ட 3 சோதனைகள்) கிடைத்தன. இவற்றில் 5 ஆராய்ச்சிகள் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டவை.
முக்கிய முடிவுகள்
எச் பைலோரிக்கு அளிக்கப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகள் இரைப்பை புற்றுநோயை தடுப்பதில் ஓரளவு பலன் அளிக்கிறது என்று நாங்கள் கண்டறிந்தோம் (மருந்துப்போலி அல்லது எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் இருந்த 3294 பங்கேற்பாளர்களில் 76 பேர் (2.4%) இரைப்பை புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர் இவர்களுடன் ஒப்பிடுகையில், 3203 பேரில் 51 (1.6%) பேர்மட்டும் பாதிக்கப்பட்டனர்). ஆனால் இந்த நோயினால் உண்டாகும் இறப்பு எண்ணிக்கை குறைகிறதா இல்லையா என்பதற்கும், இவை ஏதேனும் ஒரு காரணத்தினால் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்குமா அல்லது கூட்டுமா என்பதற்கும் அல்லது உணவுக்குழாய்க்குரிய புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதற்கும் தகவல்கள் தெளிவாகயில்லை. சிகிச்சையின் பக்கவிளைவுகள் பற்றி தரவுகள் சரியாக தெரிவிக்கப் படவில்லை.
சான்றின் தரம்
பாரபட்ச ஆபத்து (risk of bias) மூன்று ஆய்வுகளில் குறைவாகவும், ஒரு ஆய்வில் தெளிவற்றதாகவும் மற்றும் இரண்டு ஆய்வுகளில் இது மிக அதிகமாகவும் இருந்தது. ஏனெனில் இதில் தீவிர நோய் ஒழிப்பு திட்டமுறைக்கு மருந்துபோலி உபயோகிக்கப்படாததால் ஆய்வின் இந்த பகுதியில் ஒளிவு மறைவு இல்லை (unblinded). மற்ற ஆய்வுகளில் தரவுகள் இரண்டு பின்பற்றலில் போதும் முரண்பாடுகளோடு இருந்ததால் அதிக பாரபட்சம் கொண்டதாயிற்று. நாங்கள் ஆராய்ச்சியின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் இந்த முரண்பாட்டை தீர்க்க முடியவில்லை. இதன் விளைவாக, நாங்கள் ஆதாரங்களின் தரத்தை பாரபட்ச அபாயம் காரணமாக உயர்தரத்தில் இருந்து மிதமான தரம் என்று குறைத்தோம்.
மொழிபெயர்ப்பு: க.ஹரிஒம் மற்றும் சி.இ.பி.என்.அர். குழு