மல்டிபிள் ஸ்கலரோசிஸ் என்பது பல குறைபாடுகளை ஏற்படுத்தி மற்றும் வயதில் இளையவர்களில் பங்கேற்பை குறைக்க கூடிய ஒரு நாள்பட்ட நரம்பியல் நோய் நிலையாகும். மல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட வயது வந்தவர்களில், மல்டி டிசிப்ளினரி (எம்டி) புனர்வாழ்வின் சான்றை இந்த திறனாய்வு பார்த்தது. உள்நோயாளி அல்லது வெளிநோயாளி புனர்வாழ்வால் உண்மையான இயலாமை குறையாத போதிலும், செயல்பாடு (இயலாமை) மற்றும் சமூகத்தில் பங்கேற்கும் ஒட்டுமொத்த திறனில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும் என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது என்று ஆசிரியர்கள் முடிவு செய்தனர் . அறிகுறிகள் மற்றும் இயலாமை மற்றும் உயர் தீவிர வெளி நோயாளி மற்றும் வீடு-சார்ந்த புனர்வாழ்வு திட்டங்களால் பங்கேற்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் குறுகிய-கால மேம்பாடுகளுக்கு குறைவான ஆதாரம் இருந்தது. நீண்ட காலத்திற்கு நடத்தப்பட்ட குறைந்த தீவிர திட்டங்களால், வாழ்க்கைத் தரம், மற்றும் கவனிப்பாளரின் தொடர்புடைய பொதுவான உடல்நலம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்தல் ஆகிய நன்மைகளில் நீண்ட-கால ஆதாயங்கள் இருந்தன. வெளி நோயாளி மற்றும் வீடு-சார்ந்த சிகிச்சை முறை போன்றவற்றை உள்ளடக்கிய எம்டி புனர்வாழ்வின் பிற நிலைகளுக்கு, கிடைக்க பெறும் ஆதாரம் அநேக முடிவுகளை எடுப்பதற்கு போதுமானதாக இல்லை.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம்,ஸ்ரீகேசவன் சபாபதி.