தோள்பட்டை வலிக்கு (தாளிறுக்கம் (adhesive capsulitis)) வாய்வழி ஸ்டீராய்டு மருந்துகள்

தாளிறுக்கக்கு (adhesive capsulitis) ஸ்டெராய்டு சிகிச்சை (வாய்வழி) குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்குரேன் திறனாய்வு சுருக்கம் வழங்குகிறது. இந்த திறனாய்வு கூறுவதாவது:

தோள்பட்டை வலிக்கு (தாளிறுக்கம் (adhesive capsulitis)) வாய்வழி ஸ்டீராய்டு மருந்துகள் குறுகிய கால அளவில் தோள்பட்டை வலிக்கான சிகிச்சையில் நன்கு செயல்படும் என்பதற்கான வெள்ளி நிலை ஆதாரங்கள்(www.cochranemsk.org), உள்ளன. வாய்வழி ஸ்டெராய்டுகள் குறுகிய காலக்கட்டத்தில் வலி, தோள்பட்டை இயக்கம் மற்றும் இயலாமையை மேம்படுத்த கூடும். ஆனால் வாய்வழி ஸ்டெராய்டுகளின் நன்மை 6 வாரங்களுக்கு மேல் நீடிக்காமல் போகலாம். குறுகிய காலத்துக்கு வாய்வழி ஸ்டெராய்டுகள் எடுப்பவர்களுக்கு இதுதவிர ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை. வாய்வழி ஸ்டெராய்டுகளின் நன்மை, தீமை பற்றி தீர்க்கமாக அறிய போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

தோள்பட்டை வலி எதனால் ஏற்படுகிறது மற்றும் எந்த எந்த மருந்துகள் இதற்கு உபயோகிக்க படுகிறது?
பல காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகலாம். இது ரோடேடார் கப்ப் நோய் அல்லது தாளிறுக்கம் (adhesive capsulitis) காரணமாகவும் வரலாம். (தாளிறுக்கம் (frozen shoulder), இறுகிய தோள்பட்டை வலி அல்லது periarthritis) என்றும் அழைக்கப்படுகிறது) பொதுவாக இந்த இரண்டு நோய்களும் வலிஉண்டாகும் என்றபோதிலும், தாளிறுக்கம் (adhesive capsulitis)தோள்பட்டையை எந்த திசையிலும் நகர்த்தினாலும் இருக்கம் தோள்பட்டை வலி மற்றும் இருக்கம் சில நேரங்களில் அதுவாகவே மறைந்து போகும் அல்லது 2 முதல் 3 வருடங்கள் வரை நீடிக்க கூடும். சிலருக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகும் முழுமையாக தங்கள் தோள்களை அசைக்முடியாமல் போகலாம்.

மருந்து மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் வலி மற்றும் விறைப்புத்தன்மையை தணிக்க பயன்படுத்தப்படுகிறது. மற்ற வாத நோய்களுக்கு ஸ்டெராய்டு மாத்திரைகள் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகையினால், (prednisolone or cortisone) போன்ற ஸ்டெராய்டு மாத்திரைகள் தாளிறுக்கதிற்கு (adhesive capsulitis) உதவலாம்.

இந்த திறனாய்வின் முக்கிய முடிவுகள்
சுமார் 6 மாதங்களாக தாளிறுக்கம்கொண்டவர்கள் இந்த ஆய்வுகள் பரிசோதித்தன. அவர்களுக்கு போலி சிகிச்சை, ஸ்டீராய்டு ஊசி அல்லது வாய்வழி ஸ்டீராய்டு வழங்கப்பட்டது மற்றும் எந்த சிகிச்சையும் வழங்கப்படாமலும் இருந்தது. பிரேட்னிசொலோன்(prednisolone) அல்லது கார்டிசொன்(cortisone) போன்ற வாய்வழி ஸ்டீராய்டுகள் சுமார் 3 முதல் 4 வாரங்கள் வழங்கப்பட்டன சிலசமயம் மக்களுக்கு வலி மற்றும் விறைப்பு தொடர்ந்து இருந்தால் மேலும் 3 முதல் 4 வாரங்கள் வழங்கப்பட்டன. ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்ளும் போது மக்கள் இயன்முறை மருத்துவம் அல்லது ஏதாவது உடற்பயிற்ச்சி திட்டம் எடுத்துக் கொண்டனர்.

வாய்வழி ஸ்டெராய்டுகளின் நன்மைகள்
3 வாரங்கள் தாளிறுக்கம் (adhesive capsulitis) உள்ளவர்கள் வாய்வழி ஸ்டெராய்டுகள் எடுத்தவர்களுக்கு

போலி மாத்திரைகளை விட நன்றாக வேலை செய்யலாம்

போலி மாத்திரை எடுத்துக்கொண்ட 100 மக்களில் 48 பேர் குணமடைந்தது என்றனர்
ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்ட 100 மக்களில் 96பேர் குணமடைந்தது என்றனர்.

போலி மாத்திரைகள் விட வலி மற்றும் இயலாமையை குறைக்கலாம்.

ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டவர்களுக்கு வலி அளவு 0 முதல் 10 என்ற அளவு கோலில் 2.7 புள்ளிகள் குறையலாம்,
இயலாமை அளவு 0 முதல் 100 அளவுகோலில் 18 புள்ளிகள் குறையலாம்

போலி மாத்திரைகளை விட தோள்பட்டை நகர்த்தல் திறனை அதிகரிக்க கூடும்

தோள்பட்டை இயக்கம் 23 டிகிரி அதிகரித்துள்ளது
ஆனால் அந்த விளைவு 6வாரங்களுக்கு மேல் நீடிக்கவில்லை அதனால் 3 வாரங்களுக்கு மேல் இந்த விளைவுகள் உறுதித்தன்மைக்கு குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லை.

வாய்வழி ஸ்டீராய்டுகள் எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களைவிட விரைவாகவும் முன்னதாகவும் வலியைக் குறைக்கலாம். ஆனால் 5 மாதங்களுக்கு பிறகு, சிகிச்சை மேற்கொள்ளாதவர்களைகாட்டிலும் வாய்வழி ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு பயன் ஏதும் இல்லை. இந்த முடிவுகளின் நிலைத்தன்மை குறித்தும் போதுமான ஆதாரங்கள் இல்லை.

வாய்வழி ஸ்டெராய்டுகளின் தீங்கு
வேறு தீவிர பிரச்சனை எதுவும் இல்லாமல் தாளிறுக்கம் (adhesive capsulitis) உள்ளவர்கள் குறைந்த கால அளவுக்கு வாய்வழி ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்வதால் தீவிர பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. என்றாலும் இதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. ஸ்டீராய்டுகள் மீது நீண்ட காலங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தீய விளைவுகளாக கொழுப்புச்சத்து அதிகரித்தல் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்தல் உள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ.நவீன் குமார் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information