ஒரு மருத்துவமனை அமைப்பில், வழக்கமான பராமரிப்பை விட சிறப்பு மருத்துவர் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முதுமை பராமரிப்பு, நோயாளிகளின் விளைவுகளுக்கு நன்மை செய்யுமா என்பதை இந்த திறனாய்வு சோதித்தது. ஒரு அவசரக்கட்ட மருத்துவமனை அனுமதித்தலுக்கு பின் ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சேவைகளை பெற்றிருந்தால், ஒரு நோயாளி ஒரு வருடம் வரைக்கும் உயிருடன் இருப்பதற்கும் மற்றும் தங்கள் சொந்த வீட்டிலேயே இருப்பதற்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதற்கு தெளிவான மற்றும் குறிப்பிடத்தகுந்த மேம்பாடுகள் உண்டு என்று தெரிகிறது.இந்த விளைவு, ஒரு பிரத்யேக வார்டில் அனுமதிக்கப்பட்டு மற்றும் ஒரு சிறப்பியல்பு பல்துறை மருத்துவ குழுவால் பராமரிக்கப்பட நோயாளிகளைக் கொண்டிருந்த சோதனைகளிலிருந்து நிலையாக தெரிகிறது. இந்த விளைவு, ஒரு பொது வார்டில் அனுமதிக்க்கப்ட்டு மற்றும் ஒரு விசிட்டிங் சிறப்பியல்பு பல்துறை மருத்துவ குழுவால் மதிப்பிடப்பட்ட நோயாளிகளில் தெளிவாக தெரியவில்லை.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்