பெல்ஸ் பால்சி திடீரென்று தொடங்கும் முகநரம்பின் கோளாறு. இது முகத்தில் ஒரு பக்கத்தின் இயக்கத்தை ஒரு பகுதியோ அல்லது முழுவதுமாக இழக்கச்செய்துவிடும். முக வாதத்தினால் பாதிக்கப்பட்டோர் ஒருச்சிலர் தவிர்த்து, பெரும்பாலனோர் சிகிச்சையின்றி முற்றிலுமாக குணமடைந்துவிடுவார்கள். நோய் மீட்டெழுதலுக்கும், முகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் பின்விளைவுகளை குறைக்க உடற்பயிற்சிகள், உயிரியல் பின்னூட்டு, இலேசர், மின்சிகிச்சைகள், நீவல் மற்றும் வெப்பச் சிகிச்சை ஆகிய இயற்பியல் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதுப்பிக்பட திறனாய்வில் மொத்தமாக 872 பங்கேற்பாளர்கள் கொண்ட, 12 ஆராய்ச்சிகள் கண்டறியப்பட்டது. அவை அனைத்தும் அதிகமான பாரபட்சம் கொண்டிருந்தது. நான்கு ஆய்வுகள் மின் தூண்டல் ( (313 பங்கேற்பாளர்கள்), மூன்று ஆய்வுகள் உடற்பயிற்சிகளின் திறனை கண்டறிய செய்யப்பட்டது மேலும் ஐந்து ஆய்வுகளில் குத்தூசியுடன் (360 பங்கேற்பாளர்கள்) பல்வேறு வடிவில் அளிக்கப்பட்ட இயன்முறை சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டது. ஒரே ஒரு நடுத்தரமான தரம்கொண்ட ஆய்வுமட்டும் நாள்பட்ட முக வாதத்திற்கு உடற்பயிற்சிகள் கட்டுப்பாட்டு குழுவைவிட பயனுள்ளவை என்று காண்பித்தது.மற்றொரு குறைந்த தரம்கொண்ட ஆய்வு முகப் பயிற்சிகள் சின்கைநீசிஸ்யை (synkinesis) (இது பெல்ஸ் பால்ஸிய்யினாள் உண்டாகும் சிக்கல்) குறைக்கவள்ளது மற்றும் குணமடையும் நேரமும் குறையும் என கண்டறிந்தது. மின் தூண்டல் திறன்வாய்ந்தா, இந்த சிகிச்சை முறைகளில் ஆபத்துக்களை கண்டுகொல்ல, மற்றும் முகப் பயிற்சியுடன் கூடுதலாக குத்தூசி மருத்துவம் அளிப்பதில் பயன் உண்டா அல்லது இதர இயன்முறை மருத்துவமுறைகள் திறன் உள்ளனவா என்று முடிவுசெய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. முடிவில்,ஒவ்வொருவருக்கென வடிவமைக்கப்பட்ட முகப் பயிற்சியானது மித அளவு முக வாதத்தினர்க்கும் மற்றும் நாள்பட்ட முக வாதத்திநர்க்கும் முக செயல்பாட்டினை மேம்படுத்த உதவும் என காண்கிறது மற்றும் ஆரம்ப காலத்தில் அளிக்கப்படும் முக பயிற்சி நோயின் மீட்டல் நேரத்தை குறைப்பதோடு கடுமையான(acute) நோயாளிகளின் நீண்ட கால முக செயலிழப்பினையையும் குறைக்கலாம் என காண்கிறது.இருப்பினும் இவற்றின் ஆதாரங்கள் தரமற்று காணப்படுகிறது. முகம்சார் பயிற்சிகளின் திறன்பாட்டை அறியவும் மேலும் அவை ஏதாவது ஆபத்து விளைவிக்க கூடுமா என்பதனை மதிப்பிட மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்: க. ஹரிஓம், பிரகாஷ். வை மற்றும் ஐ.சி.பி.என்.அர் குழு