பக்கவாதத்தால் பாதிகப்பட்டவர்களில், கிட்டதட்ட 80% வரையிலான மக்கள் தங்கள் பாதிக்கப்பட்ட கரங்களில் உணர்ச்சி இழப்பை அனுபவிக்கின்றனர். இந்த உணர்ச்சி இழப்பு, கரங்களில் காயம் ஏற்படும் சாத்தியங்களை அதிகப்படுத்துவதுடன் கைகளின் செயல்பாட்டுத்திறனை குறைப்பது மற்றும் பாதிக்கபட்டவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பிறர் உதவி இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்ளும் திறனையும் தாக்குகிறது. உணர்ச்சி இழப்பிற்க்கான பல்வேறு சிகிச்சைகளின் பயன்களை ஆய்வு செய்த, 467 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற,13 சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த சிகிச்சைகள் பயனளிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் குறைவு. ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை சோதித்த ஆய்வுகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இல்லை, பெரும்பாலும் ஆய்வுகள் தரத்தில் குறைவாகவும் மற்றும் போதுமான தகவல்கள் கொண்டில்லாமலும் இருந்தது. தெளிவான பரிந்துரைகள் செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பு: இ. நவீன் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு