எச்ஐவி, பால்வினை நோய், மற்றும் இளம் பருவ கர்ப்பம் தடுப்பதற்கான பள்ளி சார்ந்த திட்டங்கள்

எச்ஐவி, பால்வினை நோய் மற்றும் இளம்-பருவ கர்ப்பம் ஆகியவற்றை தடுப்பதற்க்கு பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் ஏற்படும் பயன் என்ன என்பதை அறிய காக்ரோன்ஆராய்ச்சியாளர்கள் இந்த திறனாய்வை மேற்கொண்டனர். 7 ஏப்ரல் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளை முறையாக தேடியபின், 55157 இளம் பருவத்தினர் பங்குபெற்றிருந்த 8 ஆய்வுகளின் முடிவுகள் இந்த திறனாய்வில் ஆராயப்பட்டன.

இந்த திறனாய்வை மேற்கொள்வது ஏன் அவசியம்? பள்ளி சார்ந்த திட்டங்கள் எவ்வாறு பயனளிக்கக்கூடும்?

பல நாடுகளில் உள்ள இளம் பருவத்தினர், குறிப்பாக இளம் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதனால் எச்ஐவி மற்றும் பிற பால்விைன நோய்கள் அதிகம் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர். இளவயதில் திட்டமிடப்படாத கர்ப்பம் ஏற்பட்டால் அவர்களின் வாழ்வில் பாதகமான விளைவுகள் ஏற்படுக்கூடும்.

பள்ளிக்கூடங்கள் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் பல பகுதிகளில் பாடத்திட்டத்தின் பகுதியாக அளிக்கப்படும் பாலியல் கல்வித் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. இத்தகைய திட்டங்களால் பாலியல் பற்றிய சரியான புரிதல் ஏற்படுமென்றும், இள வயதினர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது குறையுமென்றும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பின்னணியில், இளம் பருவத்தினருக்கு ஏற்படும் பால்விைன நோய்களையும், இளம் பருவத்திலேயே கர்ப்பம் ஏற்படுவதையும் பள்ளி திட்டங்களின் செயல்பாட்டால் குறைக்க முடியுமா என்று அறியவே இந்த திறனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த திறனாய்வில் என்ன கண்டறியப்பட்டது?

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார கல்வி திட்டங்கள்

தற்போது உள்ள கல்வி திட்டங்களால் இளம் பருவத்தில் ஏற்படும் எச்.ஐ.வி தொற்றில் குறைவு ஏற்படுவதில்லை(குறைந்த தர ஆதாரங்கள்)இத்திட்டங்களால் மற்ற பால்வினை நோய்கள் ஏற்படுவது குறைவதில்லை (ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் தொற்று- மித தர ஆதாரம்; சிபிலிஸ் தொற்று- குறைந்த தர ஆதாரம்), மற்றும் இளம் பருவத்தில் கர்ப்பம் ஏற்படுவதும் குறைவதில்லை (மித தர ஆதாரம்).

பள்ளி வருகையை ஊக்குவிக்க பரிசு அல்லது ஊக்கத்தொகை திட்டங்கள்

மாணவர்கள் பள்ளியில் தொடர்வதை ஊக்குவிப்பதற்காக மாதாந்திர ஊக்கத்தொகை கொடுப்பதாலும், இலவச பள்ளி சீருடைகள் தருவதாலும் வளர் இளம் பருவத்தில் ஏற்படும் எச்.ஐ.வி தொற்று குறைவதில்லை (குறைந்த தர ஆதாரம்). மாதாந்திர ஊக்கத்தொகை, அல்லது இலவச பள்ளி சீருடைகள் கொடுப்பதால் மற்ற பால்வினை நோய் தொற்றுகள் குறையுமா என்பது பற்றி தற்போது போதிய ஆதாரம் இல்லை (மிக குறைந்த உறுதிபாட்டுடைய ஆதாரம்). இருப்பினும், பள்ளியில் வருகை பதிவேடை ஊக்கவிக்க கொடுக்கப்படும் இத்திட்டங்களால் இளம் பருவத்தில் ஏற்படும் கர்பங்கள் குறையலாம் (குறைந்த தர ஆதாரம்).

ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஊக்கத்திட்டங்கள்

ஒரே ஒரு ஆராய்ச்சியின் அடிப்படையில், இலவச பள்ளி சீருடை போன்ற சலுகைகளுடன் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார கல்வித் திட்டத்தையும் இணைத்தால் இளம் பெண்களில் ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் தொற்றை குறைக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது (குறைந்த தர ஆதாரம்)ஆனால் , எச்ஐவி தொற்று மற்றும் கர்ப்பம் ஏற்படுவது குறைவதில்லை (குறைந்த தர ஆதாரம்).

திறனாய்வின் முடிவுகள்

கல்வி திட்டங்களால் மட்டுமே இளம் பருவத்தில் ஏற்படும் பால்வினை நோய்களையோ கர்ப்பண்களின் எண்ணிக்கையையோ குறைக்கமுடியும் என்று சொல்ல தற்பொழுது போதிய ஆதாரம் இல்லை. ஊக்கத்தொகை சார்ந்த தைலயீடுகள் மூலம், இளைஞர்கள் மீதும், குறிப்பாக மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் மீது கவனம் கொள்ளும்போது வளர் இளம் பருவ கர்ப்பபத்தை ஒருவேளை குறைக்கக்கூடும் ஆனால் இதை உறுதிப்படுத்த மேலும் உயர் தரமான சோதனைகள் தேவையாய் இருக்கின்றது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால், ஆனந்த விஸ்வநாதன்]

Tools
Information