கண் காயங்கள், குருட்டுத்தன்மையின் ஒரு தடுக்கப்படக்கூடிய காரணமாகும், ஆனால் இன்னும் அனைத்து வயதினரையும் பாதிக்கிற ஒரு குறிப்பிடத்தக்க செயலிழக்கச் செய்யும் ஒரு ஆரோக்கிய சிக்கலாகவே இருக்கிறது. ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு தேவைகள் மற்றும் பரவலாக சட்டங்கள் இருக்கிற போதிலும், இன்னமும் வீட்டில், பணியிடத்தில் , பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போது அல்லது சாலை விபத்துகளின் விளைவாக காயங்கள் ஏற்படலாம்.
எழுதப்பட்ட பொருட்கள் , ஒளி அல்லது ஒலி நாடாக்கள் போன்ற கண் காயங்களை தடுப்பதற்கான விளக்கக் கல்வி தலையீடுகளின் திறனை பார்த்த சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் மற்றும் முன் மற்றும் பின் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளை இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் தேடினர். சேர்க்கை அடிப்படையை சந்தித்த, பல்வேறு நாடுகளில் உள்ள பலவகையான மக்கள் சம்பந்தப்பட்ட, பல்வேறு விளக்கக் கல்வி தலையீடுகள் உள்ளடக்கிய ஐந்து ஆய்வுகளைக் இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் கண்டறிந்தனர். அடையாளம் காணப்பட்ட ஆய்வுகளின் குறைந்த தரம் காரணமாக, கண் காயங்களைத் தடுக்கும் விளக்கக் கல்வி தலையீடுகளின் திறனிற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை என்று ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
மேற்படியான உயர் தர, மற்றும் நீண்ட பின்தொடர் காலங்களுடன் நடத்தப்படுகின்ற சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதிகமான சோதனைகள், உயர் வருமானம் உள்ள நாடுகளுடன் ஒரு ஒப்பீட்டை முன்னெடுக்கும் பொருட்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.