எந்த முந்தைய இருதய கோளறும் இல்லா மிதமான உயர் இரத்த அழுத்தம் உடைய பெரும்பாலனோர் இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரையை உட்கொள்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முடிவு நோயாளிகள் (எ.க மருந்தின் பக்கவிளைவு, வாழ்நாள் முழுவது மருந்து உட்கொளள், மருந்தின் விலை, இதுபோல் இன்னும் பல) மற்றும் மூன்றாம் தரப்பு கொடுப்போன் (third party payer) (எ.க மருந்துக்களின் அதிக விலை, மருத்துவரின் சேவை, ஆய்வு சோதனைகள், இதுபோல் இன்னும்) ஆகிய இருவருக்கும் முக்கிய பாதிப்பை ஏற்ப்படுத்தும். இத்திறன்ஆய்வில் சிகிச்சை பெற்ற மற்றும் சிகிச்சை பெறாத மக்களின் உடல்நல நிலையை ஒப்பிடப்படுள்ளது. கிடைத்த குறைந்த அளவு பங்கேற்பலர்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மாரடைப்பு, பக்கவாதம்.மற்றும் மரணத்தில் சிகிச்சை பெற்ற மற்றும் சிகிச்சை பெறாத மக்களிடம் எந்த வேறுபாடும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9% மக்கள் மருந்தின் பாதகமான விளைவின் காரணமாக சிகிச்சையை பாதியில் நிறுத்தி கொண்டனர். எனவே இரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி இந்த மக்களிடத்தே மேலும் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்.
மொழிபெயர்ப்பு: பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு