திறனாய்வுக் கேள்வி : பக்கவாதம் கொண்ட மக்களில், அயர்ச்சிக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க பயன்படுத்தப்பட்ட ஏதாவது சிகிச்சை தலையீட்டின் விளைவு பற்றிய ஆதாரத்தை திறனாய்வு செய்தோம்.
பின்புலம்: அயர்ச்சி, பக்கவாதத்திற்கு பிறகு ஒரு பொதுவான மற்றும் கலங்கடிக்கக்கூடிய பிரச்சனையாகும், ஆனால் பக்கவாதம் கொண்ட மக்களில், அதற்கு சிகிச்சை அளிக்க அல்லது தடுக்க எந்த ஒரு சிகிச்சை தலையீடும் பரிந்துரை செய்யப்படவில்லை. எனவே, ஏதாவது ஒரு சிகிச்சை தலையீடு பக்கவாதம் கொண்ட மக்களில் அயர்ச்சி இருப்பதை அல்லது அதின் தீவிரத்தை, அல்லது இரண்டையும் குறைக்க முடியுமா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியமாகிறது.
ஆய்வு பண்புகள்: ஆதாரம் மே 2014 வரை தற்போதையது. 703 பக்கவாதத்தால் பாதிக்கபட்ட மக்களைக் கொண்ட 12 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை (சீரற்ற முறையில் மக்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை குழுக்களில் ஒன்றில் ஒதுக்கீடு செய்த மருத்துவ ஆய்வுகள்) நாங்கள் கண்டோம். இந்த 12 சோதனைகளில் , எட்டு சோதனைகள் அயர்ச்சி கொண்ட மக்களை மட்டுமே சேர்த்தன மற்றும் அயர்ச்சிக்கான சிகிச்சை அளிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டவை. எந்த சோதனையும் அயர்ச்சி தடுப்பை முதன்மை நோக்கமாகக் கொள்ளவில்லை. மற்ற நான்கு சோதனைகள் அயர்ச்சி தடுப்பை அல்லது சிகிச்சையை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அயர்ச்சியை ஒரு விளைவாக அறிக்கையிட்டன.
முக்கிய முடிவுகள்: பக்கவாதம் கொண்ட மக்களில், அயர்ச்சிக்கு சிகிச்சை அளிக்க அல்லது தடுக்க எந்த ஒரு சிகிச்சை தலையீட்டின் பயன்பாட்டிற்கும் ஆதரவளிக்க போதுமான ஆதாரம் இல்லை.
சான்றின் தரம்: ஆய்வின் பொதுவான தரம் குறைந்து இருந்தது. அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு சிகிச்சை தலையீடும் ஒரே ஒரு சோதனையில் விசாரணைக்குள்ளானதனால், கிடைக்கப் பெறும் தரவுகள் வரம்பிற்குட்பட்டிருந்தது. கூடுதலாக, சில சோதனைகள் சிறியதாகவும் மற்றும் மோசமான ஆய்வு வடிவமைப்புகளை பயன்படுத்தின. எனவே, அதிகப்படியான உயர் தர சோதனைகள் தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.