வலியானது, துண்டிக்கப்பட்டுவிட்ட உடலின் பகுதியிலோ (மாய வலி) அல்லது உறுப்பு துண்டிக்கப்பட்ட இடத்திலோ (அடிக்கட்டை வலி), அல்லது இரண்டிலுமோ இருக்கலாம். மாய வலி மற்றும் அடிக்கட்டை வலி ஆகியவைகள் சிக்கலான நிலைமைகளாகும் மற்றும் உடல் 80% துண்டிக்கப்பட்டு விட்டவர்களை பாதிக்கும். அதற்கானஅடிப்படை காரணங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. மருந்து சிகிச்சை மிகவும் பொதுவான சிகிச்சையாக இருந்தும் இதுவரையிலும் மோசமாக நிர்வகிக்கப்படுவதாக உள்ளது. மருந்து அல்லாத சிகிச்சை தலையீடுகளின் தேவை அங்கீகரிக்கபட்டுள்ளது மற்றும் அதில்மின்வழி நரம்பு தூண்டுதல் (டென்ஸ்) ஒரு முக்கிய பங்கு ஆற்றுவதாக இருக்கலாம்.
டென்ஸ், ஒரு மலிவான, பாதுகாப்பான மற்றும் பயன்படுத்த எளிதான வலி நிவாரண நுட்பமாகும். தோலின் அடித்தளத்தில் உள்ள நரம்புகளைச் செயல்படச் செய்ய வழங்கப்பட மின்சாரத்தை உருவாக்கும் ஒரு பேட்டரியில் இயங்கும் சிறிய சாதனத்தைப் பயன்படுத்தி டென்ஸ் நிர்வகிக்கப்படுகிறது.
மார்ச் 2015-ல் ஒரு மேம்படுத்தப்பட்ட பல்வேறு தரவுத்தளங்களின் தேடலானது எந்தஆய்வுகளும் இந்த திறனாய்வில் சேர்ப்பதற்கான அடிப்படை தகுதியை சந்திக்கவில்லை என்று கண்டது.
மாய வலி மற்றும் அடிக்கட்டை வலியில் டென்ஸ்-ன் திறனை கணிப்பதற்கான சாத்தியம் இல்லை.
மாய வலி மற்றும் அடிக்கட்டை வலிக்கு டென்ஸ்-சை பயன்படுத்துவதிலிருந்து வரும் தீங்கின் அபாயத்தை மதிப்பீடு செய்ய சாத்தியம் இல்லை.
மாய வலி மற்றும் அடிக்கட்டை வலிக்கான டென்ஸ்-சிற்கு ஒரு பெரிய, பலமைய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.