பக்கவாதம் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனை. அது கடுமையான இயலாமை மற்றும் மரணத்திற்கு காரணியாக உள்ளது. பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைந்த எண்ணிக்கையிலான மருந்துகளே உள்ளது. ஸ்டேடின், பொதுவாக கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளின் குழுவை சார்ந்தது. இவை கடுமையான மாரடைப்பு நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட போது பாதுகாப்பானது மற்றும் திறன் வாய்ந்தது என்று அறியப்பட்டது. ஆகையால், கடுமையான பக்கவாத நோயாளிகளுக்கு இவை பயன் உள்ளதாக இருக்கலாம். 625 கடுமையான பக்கவாத நோயாளிகள் சம்பந்தப்பட்ட எட்டு ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஸ்டேடின் பாதுகாப்பானதா மற்றும் பயன் உள்ளதா என்று தெரிந்துக் கொள்ள, துரதிட்டவசமாக போதுமான தகவல்கள் இல்லை.
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு