புற்று நோயிலிருந்து பிழைத்தவர்கள் பெரும்பாலும் புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சையின் விளைவாக பல உளவியல் மற்றும் பாதகமான உடற் நிகழ்வுகளைக் கொண்டிருப்பர்.அவர்கள், புற்றுநோயில்லாத மக்களை விட, குறைந்த வாழ்க்கைத் தரத்தாலும் (குவாலிட்டி ஆப் லைப், க்யூஒஎல்) பாதிக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள், எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சை முடித்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தன.மேலும், ஒரு சிறந்த வாழ்க்கைத் தரம் நீண்ட ஆயுளைக் கணிக்கக் கூடும். இந்த திறனாய்வு, அனைத்து புற்றுநோய் சிகிச்சையை முடித்த மக்களின் மத்தியில், வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் வாழ்க்கை பகுதிகள் (எ.கா. சோர்வு, கவலை, மன ஆரோக்கியம்) ஆகியவற்றின் மீது உடற்பயிற்சியின் விளைவுகளைப் கண்டது.
மொத்தம் 3694 மக்களை கொண்ட 40 பரிசோதனைகளை இந்த திறனாய்வு சேர்த்துள்ளது. உடற்பயிற்சி திட்டத்தை முடித்த பிறகு, உடற்பயிற்சியானது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடும் என்று முடிவுகள் கூறுகின்றன.உடற்பயிற்சி, ஒரு நபரின் புற்றுநோய் பற்றிய அவரின் அல்லது அவளின் கவலையையும் குறைக்கக் கூடும், மற்றும் ஒரு நபர் கொண்டுள்ள தன் (ஆண் அல்லது பெண்) உடல் குறித்த கருத்து முறையை பாதிக்கக் கூடும். ஒரு நபர் தன்னுடைய உணர்ச்சிகள், பாலியல், தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் அல்லது சமூக செயல்பாடுகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டிய வழிக்கும் உடற்பயிற்சி உதவும். உடற்பயிற்சி திட்டத்தின் வெவ்வேறு சமயங்களின் போதும் மற்றும் அத்திட்டம் முடிந்த பிறகும், கவலை, சோர்வு, மற்றும் வலி ஆகியவற்றை உடற்பயிற்சி குறைத்தது.ஒரு நபரின் தெளிவாக சிந்திக்கக் கூடிய திறன் அல்லது சமூகத்தில் அவன் அல்லது அவளின் பாத்திர செயல்பாட்டின் மேல் உடற்பயிற்சியின் எந்த விளைவும் இல்லை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், ஒரு நபரில் அவன் அல்லது அவளின் ஆன்மீக அல்லது உடல் ஆரோக்கியம், அல்லது உடல் திறன் பற்றிய கருத்து முறைகளின் மேல் உடற்பயிற்சியின் எந்த விளைவும் இல்லை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.
எனினும், இந்த கண்டுபிடிப்புகளை எச்சரிக்கையுடன் நோக்க வேண்டிய அவசியம் உள்ளது, ஏனென்றால் இந்த திறனாய்வு, உடற்பயிற்சி வகை, திட்டத்தின் காலஅளவு, மற்றும் பங்கேற்பாளர்கள் எவ்வளவு கடினமாக பங்கு பெற வேண்டியிருந்தது போன்றவற்றில் வேறுபட்டிருந்த பல்வேறு வகையான உடற்பயிற்சி திட்டங்களை பார்த்தது. மேலும், வாழ்க்கைத் தரத்தை அளவிட பல்வேறு வழிகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.
உடற்பயிற்சி திட்டத்தை முடித்தப் பிறகு, உடற்பயிற்சியின் விளைவுகளை ஒரு நீண்ட-கால நேரத்திற்கு எவ்வாறு பராமரிக்கலாம், மற்றும் உடற்பயிற்சி திட்டத்தின் பகுதிகளில் எவை முக்கியமானவை (அதாவது, உடற்பயிற்சியை எப்போது தொடங்கலாம், உடற்பயிற்சி வகை, திட்டத்தின் அல்லது உடற்பயிற்சி அமர்வின் காலஅளவு, எவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்) என்று தீர்மானிப்பதற்கும் அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் வகைக்கு, ஒரு வகையான உடற்பயிற்சி மற்றொரு வகையை விட வாழ்க்கைத் தரத்தின் மேல் அதிகப்படியான விளைவைக் கொண்டிருக்குமா என்பதைப் பற்றி அறிவதும் முக்கியமாகும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.