பின்புலம் - இடுப்பு கீல்வாதம் மற்றும் உடற்பயிற்சி என்றால் என்ன?
முதுமை மூட்டழற்சி என்பது உங்கள் இடுப்பு போன்ற மூட்டுகளை தாக்கும் நோயாகும். குருத்தெலும்பை மூட்டு இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பைச் சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து அதனைச் சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்யும். உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும். முதுமை மூட்டழற்சி குருத்தெலும்பின் தேய்மானத்தினால் ஏற்படுகிறது என்றே மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் இப்பொழுதோ, அது ஒரு முழுமையான மூட்டு நோய் என்று கருதப்படுகிறது.
கீல்வாதம் ஆண்களையும் பெண்களையும் சமமாக பாதிக்கும் மிக பரவலான வாத வகைகளில் ஒன்றாகும். மக்கள் முதிர்வடையும்போது ஏற்படும் இயலாமைக்கு கீல்வாதம் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
தசை வலிமை, உடல் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது சீராக வைக்கிற எந்த ஒரு செயற்பாடாகவும் உடற்பயிற்சி இருக்கலாம். மக்கள் உடல் எடையைக் குறைக்கவும், தசை வலிமையை அதிகரிக்கவும், மற்றும் கீல்வாத அறிகுறிகளிலிருந்து விடுபடவும் என பல்வேறு காரணங்களுக்காகவும் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
ஆய்வு பண்புகள்
இடுப்பு கீல்வாதத்திற்கு உடற்பயிற்சி அளிக்கும் விளைவுகளை குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த மேம்படுத்தப்பட்ட காக்குரேன் மறுஆய்வு சுருக்கம் வழங்குகிறது. பிப்ரவரி 2013 வரை தொடர்புடைய அனைத்து ஆய்வுகளை தேடிய பிறகு, நாங்கள் மறுஆய்வின் கடைசி பதிப்பு வரை ஐந்து புதிய ஆய்வுகளைச் சேர்த்ததுடன், 10 ஆய்வுகள் (549 பங்கேற்பாளர்கள்),பெரும்பாலும் லேசான முதல் மிதமான இடுப்பு கீல்வாதம் மட்டும் அல்லது முழங்கால் கீல்வாதத்துடன் கிடைத்தது. உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், தாய்சி திட்டத்தில் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் கூடிய ஒரு ஆய்வு தவிர மற்ற ஆய்வில் பங்கேற்றவர்கள் நிலம் சார்ந்த பயிற்சி திட்டங்களான பாரம்பரிய தசை வலுப்படுத்துதல், செயல்பாட்டு பயிற்சி மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சி திட்டங்களை தனித்தனியாக கண்காணிக்கப்பட்டோ அல்லது ஒரு குழுவின் ஒரு பகுதியாகவோ மேற்கொண்டார்கள்.
முக்கிய முடிவுகள்
0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில் வலி (குறைந்த புள்ளிகள் என்றால் குறைந்த வலி):
-ஒரு உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் உடற்பயிற்சி செய்யாதவாவர்களுடன் சிகிச்சை முடிவில் ஒப்பிடுகையில், அவர்களின் வலியை 8 புள்ளிகள் குறைவாக (4 முதல் 11 புள்ளிகள் குறைந்து, 8% முழுமையான முன்னேற்றம்) மதிப்பீடு செய்தார்கள்.
-ஒரு உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் தங்களின் வலியை 21 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.
-உடற்பயிற்சி செய்யாத மனிதர்கள் தங்களின் வலியை 29 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.
0 முதல் 100 புள்ளிகள் என்ற அளவுகோலில் உடல் செயல்பாடு (குறைந்தளவு புள்ளிகள் என்றால் சிறந்த உடல் செயல்பாடு):
-ஒரு உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் உடற்பயிற்சி செய்யாதகளுடன் சிகிச்சை முடிவில் ஒப்பிடுகையில், அவர்களின் உடல் செயல்பாட்டை 7 புள்ளிகள் குறைவாக (1 முதல் 12 புள்ளிகள் குறைந்து, 7% முழுமையான முன்னேற்றம்) மதிப்பீடு செய்தார்கள்.
-ஒரு உடற்பயிற்சி திட்டத்தை செய்து முடித்தவர்கள் தங்களின் உடல் செயல்பாட்டை 22 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.
-உடற்பயிற்சி செய்யாத மக்கள் தங்களின் உடல் செயல்பாட்டை 29 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.
வாழ்க்கைத் தரம் (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த வாழ்க்கைத் தரம்):
-ஒட்டுமொத்தமாக, ஆய்வுகளில் பங்கேற்ற இடுப்பு கீல்வாதமுடைய மக்களின் வாழ்க்கைத் தரம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை ஒத்திருந்தது (ஒழுங்குமுறை மதிப்பில் சராசரியாக 50 புள்ளிகள்) மற்றும் ஒரு உடற்பயிற்சி திட்டத்தில் பங்கு கொள்வதன் மூலம் வாழ்க்கை தரம் மேலும் மேம்படவில்லை: 0 புள்ளிகள் உயர்வு.
-உடற்பயிற்சி செய்து முடித்த மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரு மக்கள் விதிமுறை சார்ந்த அளவுகோலில் 50 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.
-உடற்பயிற்சி செய்யாத மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரு மக்கள் விதிமுறை சார்ந்த அளவுகோலில் 50 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.
விலகியவர்கள்
-நூறில் மூன்று பேர் உடற்பயிற்சியை கைவிட்டார்கள் (1% முழுமையான அதிகரிப்பு).
-உடற்பயிற்சி செய்தவர்களில் நூறில் ஆறு பேர் கைவிட்டார்கள்.
-உடற்பயிற்சி செய்யாதவர்களில் நூறில் மூன்று பேர் கைவிட்டார்கள்.
ஆதாரத்தின் தரம்
இடுப்பு மூட்டு கீல்வாதம் கொண்ட மக்களில், உடற்பயிற்சி சற்றே வலியை குறைத்து, சற்றே உடல் செயல்பாட்டை மேம்படுத்தியது என்பதற்கு உயர்தர ஆதாரம் உள்ளதாக இந்த மறுஆய்வு காட்டியது. இனி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி இந்த முடிவுகளை மாற்றி மதிப்பீடு செய்ய சாத்தியமில்லை.
உடற்பயிற்சி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாது என்பதை குறைந்த தரமுடைய ஆதாரம் சுட்டிக்காட்டியது. இனி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி இந்த முடிவுகளை மாற்றி மதிப்பீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
உடற்பயிற்சி, ஆய்வைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காது என்று மிதமான ஆதாரம் காட்டியது. இனி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி இந்த மதிப்பீட்டை மாற்றலாம்.
உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்கள் அல்லது விழுதல் போன்ற பக்க விளைவுகளை பற்றிய துல்லியமான தகவல் நமக்கு இல்லை, ஆனால் நாம் இவற்றை அரிதாக எதிர்பார்க்கலாம், மற்றும் ஆய்வுகளில் காயங்கள் பற்றி எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு