சேதமடைந்த நரம்புகளால் நரம்பு சார்ந்த வலி உண்டாகிறது. இதற்கு பலவிதமான வேறுபட்ட பெயர்கள் இருக்கலாம். இவற்றில் பொதுவாக அதிகம் காணப்படுவது வலியுடன் கூடிய நீரிழிவு நோய் சார்ந்த நரம்பு கோளாறு( painful diabetic neuropathy),முகத் தேமலுடன் கூடிய நரம்பு வலி( postherpetic neuralgia)அல்லது பக்கவாதத்திற்குப் பிந்தைய வலி( post-stroke pain ) போன்றவையாகும். சில பாதிக்கப்பட்ட திசுக்களிலிருந்து (உதாரணத்திற்கு, கீழே விழுதல் அல்லது ஒரு வெட்டு காயம் அல்லது ஒரு முழங்கால் மூட்டு வாதம்) ஆரோக்கியமான நரம்புகள் வழியாக செல்லும் வலி தகவல்களிலிருந்து இது வேறுபட்டிருக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளிலிருந்து வேறுபட்டு நரம்பு நோய் வலிக்கு வேறு விதமான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். பாராசெட்டமால் அல்லது இபுப்ரோஃபென் போன்ற மருந்துகள், நரம்பு சார்ந்த வலிக்கு பயனுள்ளதாக இராது. சில நேரங்களில் மன அழுத்தம் அல்லது வலிப்பு சிகிச்சைக்கு பயன்படுகின்ற மருந்துகள் நரம்புநோய் வலி கொண்ட சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அமிற்றிப்ட்டிளின் (Amitriptyline) ஒரு உளச்சோர்வு போக்கி. உளச்சோர்வு போக்கிகள் நரம்பு சார்ந்த வலிக்கு பரவலாக பரிந்துரைக்கப் படும் மருந்து. நரம்பு சார்ந்த வலிக்கு பொதுவாக அமிற்றிப்ட்டிளின் உபோயோகிக்கப் படுகிறது. இருப்பினும் முந்தய திறனாய்வில் இதன் பயன்பாட்டை உறுதிசெய்ய போதுமான நல்ல தரம் கொண்ட ஆதாரங்கள் கிட்டவில்லை. பெரும்பான்மையான ஆய்வுகள் சிறியனவாகவும், பழையனவாகவும் இருந்தன.பயன் தருவனவாக இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டு உபயோகிக்கப்படும் முறைகள் அல்லது அறிவிக்கப்படும் முடிவுகள் அவற்றைவிட மேம்பட்டனவாக இருக்கின்றன.
ஆராய்ச்சிகள்குறைந்தபட்சம் மிதமான தீவிரம் கொண்ட நரம்பு சார்ந்த வலி உள்ள வயது வந்தோர் (adults) பங்குபெற்ற புதிய ஆராய்ச்சிகளை மார்ச் 2015ல் தேடினோம். இரண்டு சிறியகூடுதல் ஆராய்ச்சிகளை மட்டும் நாங்கள் கண்டறிந்தோம். அவை சிகிச்சை பயன்உள்ளதா அல்லது தீங்கு விளைவிக்க கூடியதா என்று கூற எந்த ஒரு நல்ல ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இது ஏமாற்றத்தை அளித்தாலும், எங்களால் இந்த மருந்து பற்றிய பயனுள்ள கருத்துக்களைக் கூறமுடியும்.
(எச்.ஐ.வி.) மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு வைரஸ் அல்லது புற்றுநோய் சிகிச்சையுடன் கூடிய நரம்பு சார்ந்த வலிக்கு அமிற்றிப்ட்டிளின் (Amitriptyline) பெரும்பாலும் வேலை செய்யாது. மற்ற வகையான நரம்பு சார்ந்த வலிக்கு அமிற்றிப்ட்டிளின் அனேகமாக வேலை செய்யாது, இருப்பினும் அதனை எங்களால் நிச்சயமாக சொல்லமுடியாது. மருந்தற்ற குளிகைவிட அமிற்றிப்ட்டிளின் நான்கில் ஒருவருக்கு (25%) கூடுதலாக வலி நிவாரணம் அளிக்கும் என்பது எங்களது சிறந்த யூகம். மருந்தற்ற குளிகைவிட கூடுதலாக அமிற்றிப்ட்டிளின் எடுத்துக் கொண்டவர்களில் நான்கில் ஒருவருக்கு (25%) பாதகமான நிகழ்வுகள் வந்தது என்று கூறினர். இது சிக்கல் மிக்கதாக இருந்தாலும் அநேகமாக கடுமையானதாக இருக்காது. கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை எங்களால் நம்பமுடியவில்லை.
நரம்பு சார்ந்த வலி உள்ளவர்களில் சிலருக்கு, அவற்றில் ஒரு சிறுபான்மையினற்கு மட்டுமே அமிற்றிப்ட்டிளின் சிறந்த வலி நிவாரணம் அளிக்கலாம் மற்றும் பெரும்பாலானவர்களில் இவை வேலைசெய்யாது என்பது இதில் இருந்து பெறப்பட்ட மூக்கிய செய்தி.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.ஆர் குழு