ஆஸ்டியோபோரோசிஸ் முதுகெலும்பு முறிவுகளை கொண்ட நபர்களில் உடற்பயிற்சியின் விளைவுகளை காக்ரேன் கூட்டமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் திறனாய்வு செய்தனர். அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை அவர்கள் தேடிய பின்னர், மொத்தம் 488 மக்களை உள்ளடக்கிய ஏழு ஆய்வுகளை கண்டனர்.
ஆஸ்டியோபோரோசிஸ் முதுகெலும்பு முறிவுகள் மற்றும் உடற்பயிற்சி என்றால் என்ன?
எலும்பானது நமது உடலின் ஒரு உயிருள்ள ஒரு பாகமாகும். நமது வாழ்நாள் முழுதும், பழைய எலும்பு அகற்றப்பட்டு புதிய வலுவுள்ள எலும்பினால் மாற்றி பொருத்தப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் கொண்டவர்களில், புதிய எலும்பு மாற்றப்படும் வேகத்தை விட பழைய எலும்பானது விரைவாக அகற்றப்படுகிறது.இதனால், எலும்புகள் பலவீனமடைந்து, முறிந்து போவதற்கு அதிகமான சாத்தியத்தை கொள்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் கொண்ட மக்களில் உடற்பயிற்சியானது அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. அதிகமான எலும்பு முறிவு அபாயத்தை கொண்டுள்ள, உதாரணத்திற்கு ஆஸ்டியோபோரோசிஸினால் முதுகெலும்பு முறிவுகளைக் கொண்டுள்ள நபர்கள் போன்றவர்களில் உடற்பயிற்சி திட்டங்கள் மாற்றியமைக்க படவேண்டும். சரிவர செய்யப்படாமல் போனால், உடற்பயிற்சி எலும்பு முறிவின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.
ஆஸ்டியோபோரோசிஸ் முதுகெலும்பு முறிவு கொண்ட மக்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்களுக்கு என்ன ஆகும்?
ஆஸ்டியோபோரோசிஸினால் முதுகெலும்பு முறிவை கொண்ட மக்களில், வலி, உட்கார்தல் மற்றும் நடத்தல் இடையேயான இயக்கத்தின் வேகம், நடக்கும் வேகம் அல்லது வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உடற்பயிற்சி ஏதேனும் விளைவைக் கொண்டிருந்ததா என்பது தெளிவாக இல்லை.
ஒரு உடற்பயிற்சி திட்டத்தை ஆரம்பித்த பிறகு, எலும்பு முறிவுகள் அல்லது கீழே விழுதல்களை மக்கள் கொண்டிருந்தனரா என்பதை கண்ட எந்த ஆய்வுகளும் இருக்கவில்லை.
பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி நுட்பமான விவரம் எங்களுக்கு இல்லை. அரிய ஆனால் கடுமையான பக்க விளைவுகளுக்கு இது குறிப்பாக பொருந்தும். உடற்பயிற்சி ஏதேனும் தீங்கு விளைவிக்குமா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்