திறனாய்வுக் கேள்வி
தீவிர சிகிச்சை பிரிவில் (இன்டென்சிவ் கேர் யூனிட், ஐசியு) ஆபத்தான உடல்நிலை குறைவோடு இருக்கும் நோயாளிகளின் செயல்பாட்டு உடற்பயிற்சி திறன் மற்றும் ஆரோக்கியம்-தொடர்புடைய வாழ்க்கைத் தரத்தின் மீது உடற்பயிற்சி புனர்வாழ்வின் விளைவுகள் பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். செயல்பாட்டு உடற்பயிற்சி திறன் என்பது, நடைபயிற்சி அல்லது மாடிப்படி ஏறுதல் போன்ற நடவடிக்கைகளை தனிநபர்கள் எவ்வளவு நன்றாக செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொற்தொகுதியாகும்.
பின்புலம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, வயது வந்தவர்களுக்கு அடிக்கடி தசை இழப்பு மற்றும் பலவீனம் உருவாகும். இது, நோயின் விளைவாகவே ஏற்படலாம், மற்றும் சிகிச்சை பெற்று வருகின்ற போது நோயாளிகள் குறைந்த இயக்கம் மற்றும் உடல்ரீதியான செயல்பாடு கொண்டதாலும் ஏற்படலாம். அவர்கள் நோயிலிருந்து மீளும்போது, இந்த தசை பலவீனம் அவர்களின் உடற்பயிற்சி செய்வதற்குரிய திறனுக்கும் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சாதாரண நடவடிக்கைகளை செய்வதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும். வயது வந்த நோயாளிகள், அவர்களின் நோய் மற்றும் பல ஆண்டுகள் நீடிக்கக் கூடிய அவர்களின் குறைக்கப்பட்ட தசை வலிமையின் விளைவால், மனச்சோர்வு அல்லது மனத்தளர்வுள்ளவர்களாக ஆக முடியும்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் நோயாளிகளில், அவர்களின் மோசமான நோய் தொடர்பான உடல் ஆக்க நிலையகற்றல் மற்றும் தசை பலவீனத்தில் இருந்து மீட்க உதவி, மற்றும் அவர்கள் தாங்கள் நலமாய் இருப்பதாய் எண்ணுவதற்கு உடற்பயிற்சி திட்டங்கள் உதவ முடியுமா என்பதை தீர்மானிப்பதற்காக ஆரோக்கிய-தொடர்புடைய வாழ்க்கைத் தரத்தை அளவிட விரும்பினோம்.
ஆய்வு பண்புகள்
18 வயதுக்கு மேலான (298 ஆண், 185 பெண்) 483 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஆறு ஆய்வுகளைச் நாங்கள் சேர்த்தோம். பங்கேற்பாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது, ஒரு இயந்திரத்திலிருந்து இருந்து மூச்சு ஆதரவை 24 மணி நேரத்திற்கு மேலாக ( எந்திரத்தால் மூச்சு விடுதல் வசதி) பெற்றிருந்தனர், மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை விட்டு வெளியேறிய பிறகு ஒரு உடற்பயிற்சி திட்டத்தை தொடங்கியிருந்தனர். ஆய்வுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இத்தாலியில் மேற்கொள்ளப்பட்டன.
உடற்பயிற்சி திட்டங்கள் இரண்டு ஆய்வுகளில் வார்டுகளில் அளிக்கப்பட்டன; ஒரு ஆய்வில் வார்டு மற்றும் இன்னொன்றில் சமூகத்தில் ; மற்றும் மூன்று ஆய்வுகளில், சமூகத்தில் வழங்கப்பட்டு இருந்தன. சிகிச்சை தலையீடுகளின் கால அளவு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறிய பிறகு மருத்துவமனையில் தங்கிய கால அளவிற்கேற்ப ஒரு நிலையான 12 வாரங்கள் வரை மாறுப்பட்டது. உடற்பயிற்சிகள், கை அல்லது கால் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் வீட்டில் பொது தசை வலுப்படுத்துதல், சுய உதவிக் கையேடுகள் வழங்குதல் மற்றும் பிசியோதெரபிஸ்ட் தலைமையில் உடற்பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட மருத்துவமனை சார்ந்த பல்வகைப்பட்ட திட்டங்களை உள்ளடக்கியது.
ஆறு ஆய்வுகளில் மூன்று ஆய்வுகள் அரசு ஆரோக்கிய ஆராய்ச்சி நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டிருந்தது. ஒரு ஆய்வு ஒரு சுயாதீனமான தொண்டு மற்றும் ஒரு வணிக நிறுவனத்திடம் (ஆய்வின் முடிவுகளின் மீது எந்ததொரு விருப்பமும் கொண்டிராத) இருந்து ஒருங்கிணைந்த நிதி ஆதரவு பெற்றிருந்தது. ஒரு ஆய்வு அதன் நிதி ஆதாரத்தை அறிவிக்கவில்லை மற்றும் மற்றொன்று ஒரு கல்வி ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நிதியுதவி பெற்றிருந்தது.
முக்கிய முடிவுகள்
உடற்பயிற்சி-சார்ந்த சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை ஒட்டுமொத்த முடிவை கண்டறிய முடியவில்லை. மூன்று ஆய்வுகள், உடற்பயிற்சி திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செயல்பாட்டு உடற்பயிற்சி திறன் முன்னேறியது என்று பதிவு செய்தது மற்றும் பிற மூன்று ஆய்வுகள் சிகிச்சையினால் எந்த விளைவுகளும் இல்லை என்று கண்டது.
இரண்டு ஆய்வுகள் மட்டும், ஆரோக்கிய-தொடர்புடைய வாழ்க்கைத் தரத்தை நோயாளி அளித்த தகவலால் அளவிட்டது, மற்றும் இந்த இரண்டு ஆய்வுகளும் சிகிச்சை தொடர்பான எந்த விளைவுகளும் இல்லை என்று காட்டியது. மீண்டும், ஒரு ஒட்டுமொத்த முடிவை நாங்கள் அடைய முடியவில்லை. எந்த ஆய்வும், நோயாளிகளால் ஏற்று கொள்ளப்பட்டஒரு சிகிச்சையை மதிப்பிடுதல் அல்லது ஒரு உடற்பயிற்சி-சார்ந்த திட்டத்தில் நோயாளியின் பங்கேற்பு அனுபவத்தை சேர்க்கவில்லை.
சான்றின் தரம்
சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில், உடற்பயிற்சி வகைகள், எவ்வாறு செயல்பாட்டு உடற்பயிற்சி திறன் அளவீடுகள் சேகரிக்கப்பட்டன, எந்த வழிகளில் முடிவுகள் வழங்கப்பட்டது மற்றும் மோசமான நோயில் இருந்த மக்கள் தொடர்பாக கணிசமான வேறுபாடுகளை கண்டோம். வழக்கமான நடைமுறையில் புனர்வாழ்வு மற்றும் உடற்பயிற்சியை பற்றிய ஒப்புதல் இல்லாததால், உடற்பயிற்சி திட்டங்கள் வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுவதாக இருந்தன. கூடுதலாக, ஆய்வுகள் எவ்வளவு நன்றாக நடத்தப்பட்டன என்பதில் உள்ள மாறுபாட்டை நாங்கள் கண்டோம். இந்த வேறுபாட்டின் காரணமாக, ஆய்வு கண்டுபிடிப்புகளில் எந்த புள்ளிவிவர சோதனைகளை மேற்கொள்வதற்கோ அல்லது உறுதியான முடிவுகளை எடுக்கவோ எங்களால் முடியவில்லை. இந்த காரணங்களினால், ஒட்டுமொத்த ஆதாரத்தின் தரம் மிகவும் குறைவாக இருந்தது.
ஆதார செலாவணி
ஆதாரம் மே 2014 வரை தற்போதையது. பிப்ரவரி 2015 -ல் தேடலை நாங்கள் மேற்கொண்டோம், நாங்கள் திறனாய்வை மேம்படுத்தும் போது பாத்தியதையுடைய ஆய்வுகளுடன் பேரம் கொள்வோம்.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.