தலையின் நிலையில் ஏற்படும் வேகமான மாற்றங்களால் தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்பு (Benign paroxysmal positional vertigo (BPPV)) ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்டவர் தானோ அல்லது தன்னை சார்ந்த சுற்றுப்புறமோ நகர்வது அல்லது சுழல்வது போல் உணர்வர். தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் செவியில் ஏற்படும் தொற்றுகளே இதற்கு பொதுவான காரணங்களாக கருதப்படுகின்றன. தலையில் அசைவுகள் இல்லாதபோதும், உட்செவியிலுள்ள குறைவட்ட குழாயிலுள்ள (Semicircular canal) துகள்கள் தொடர்ந்து நகர்வதால், தீங்கற்ற எதிர்பாraaத நிலை சார்ந்த தலைச்சுற்று ஏற்படலாம். தொடர்ந்து அசைவது போல் ஏற்படும் உணர்வு, மற்ற உள்ளணர்வு தகவல்களோடு முரண்பாடாய் செயல்படுகிறது. BPPVயின் அறிகுறிகள் ஈஃப்ளி செயல்முறையால் மேம்படுவதாக கண்டறியபட்டுள்ளது. உட்செவியிலுள்ள குறைவட்ட குழாயிலுள்ள துகள்களை நீக்கும் (இப்பிரச்சனைக்கு முக்கியகாரணி) பொருட்டு, தலையையும் உடலையும் நான்கு மாறுபட்டவகையில் அசைவுகளை ஏற்படுத்துவதே இச்செய்முறையாகும். இச்செய்முறையின் போது மாஸ்டாய்டு நீட்டதில் (Mastoid Process) அதிர்வுகளைத்தருதல் (Vibration), செயல் முறைக்குப்பின் உடல் சமன்பாட்டிற்கான பயிற்சிகளை (Balance exercises) அளித்தல், நோயாளி கிடக்கும் நிலைகளில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துதல் (உதாரணமாக, சில நாட்களுக்கு பாதிக்கப்பட்ட செவியின்பக்கமாக படுக்ககூடாது) போன்று எப்லே செயல்முறையுடன் பல திருத்தங்களை இன்றைய மருத்துவநடைமுறையில் பின்பற்றப்படுகின்றன. மேலும், பல்வேறு வழிமுறைகளிலும் உத்தி செய்யப்படுகின்றது.
நங்கள் மொத்தம் 855 பங்கேற்பாளர்களை உடைய 11 ஆய்வுகளை இக்கூட்டாய்வில் சேர்த்துள்ளோம். இவற்றில் எப்லே உத்திக்குபின் ஏற்படுத்தப்பட்ட நிலை கட்டுப்பாடுகளை (கழுத்து சோடி பயன்படுத்துதல் / தலையை அசைக்காமல் இருத்தல் / நேராகப் படுத்தல் ) ஒன்பது ஆய்வுகள் ஆராய்ந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகளுடன் செய்யப்படும் எப்லே செய்முறை சிகிச்சை வெறும் எப்லே செயல்முறையைவிட குறிப்பிடத்தக்க புள்ளிவிவர வேறுபாடுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இரு குழுக்களிலும் வேறுபாடுகள் கண்டறியப்பட்டாலும், நிலை கட்டுப்பாடுகளை (Postural restrictions) கூட்டுவதின் மூலம் சிறியளவிலேயே கூடுதல் நன்மை ஏற்படுவதாகவும், மேலும் 80%க்கும் சற்றே குறைவான நோயாளிகளில் எப்லே செயல் முறையை மட்டுமே அளிப்பதின் மூலம் நல்ல பலன்கள் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கழுத்து இறுக்கம், கிடைமட்ட(Horizontal) BPPV (பின்புறகுழாய் BPPV யை ஒத்த BPPVயின் உட்பிரிவு, ஆனால் நோய் அறிகுறிகளில் சில தனித்த வித்தியாசங்களையுடையது ), கிறுகிறுப்பு (Dizziness), மற்றும் நிலையில்லா சமநிலை (Disequilibrium) (ஒருவர் நிற்கும் போது ஏற்படும் உறுதியில்லா உணர்வு ) போன்ற சிறு சிக்கல்கள் சில நோயாளிகளுக்கு ஏற்படுவதாக நான்கு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இரு ஆய்வுகளில் எப்லே செயல் முறையுடன் மாஸ்டாய்டு நீட்டத்தில் அளிக்கப்பட்ட அலைவு (Oscillation) /அதிர்வுகள் (Vibrations), ஒப்பு சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது; இவ்வகையான சிகிச்சை எந்த வேறுபாடுகளையும் இருக்குழுக்களிடையே ஏற்படுத்தவில்லை சிகிச்சைக்கு பின் ஏற்படுத்தப்படும் நிலை கட்டுப்பாடுகளின் மூலம் எப்லே செயல் முறையிலுள்ள கூடுதல் வழிகளை ஓர் ஆய்வு ஆராய்ந்துள்ளது. ஒப்பு சிகிச்சையுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இதில் கண்டறியப்படவில்லை.
தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் எதுவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்படவில்லை. முடிவுகளை கவனமாக புரிந்துக்கொள்ளுதல் வேண்டும் மேலும், இதை சார்ந்த ஆய்வுகள் பல செய்யப்படுதல் அவசியம்.
மொழிபெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச ,பா. வெங்கடேசன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.