அநேக நாடுகளில், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை கணினிமயமாக்குவதற்கு தொழில் நுட்பத்தில் மிக அதிகமான முதலீடு செய்யப்படுகிறது. புகையிலை பழக்கத்தை பதிவிட, புகையிலையிலிருந்து விடுபட சுருக்கமான அறிவுரை வழங்க, மருந்துகள் பரிந்துரைக்க, மற்றும் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான ஆலோசனைக்கு அனுப்புவதற்கு மருத்துவர்களுக்கு மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நினைவூட்ட மின்னணு மருத்துவ ஆவணங்கள் பயன்படுத்தப்படும். இத்தகைய சேவைகளுக்கு மக்களை அனுப்பவும் மற்றும் ஒரு மருத்துவமனை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை மதிப்பிடவும் ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறன. கூடுதலான சிகிச்சை சேவைகளுக்கு (உதாரணத்திற்கு: தொலைபேசி மூலம் புகையிலை நிறுத்துவதற்கான சேவை) மின்னணு மூலம் பரிந்துரைப்புகளை அளிப்பதன் மூலம் புகையிலை பயன்பாட்டிற்கான வழக்கமான மருத்துவ நடைமுறையை பின்பற்ற ஆவணங்கள் உதவி செய்யும். இந்த திறனாய்வில் நாங்கள் 16 ஆய்வுகளை சேர்த்தோம். அவற்றில் ஒன்பது ஆய்வுகள் கண்காணிப்பு வகை படிப்புகள் ஆதலால், அவை சீரற்ற கட்டுப்பட்டு சோதனைகளை விட குறைந்த தரம் கொண்டவையாகும். புகையிலை பயன்படுத்தும் நோயாளிகளுக்கான மருத்துவர்களின் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, மின்னணு ஆவணங்களோடு மிக மிதமான அளவே தொடர்புடைய மேம்பாடுகளை நாங்கள் கண்டோம். குறிப்பாக, புகையிலை பயன்படுத்துவது பற்றிய பதிவேடுகள், மற்றும் புகைப்பிடித்தலை விடுவதற்கான ஆலோசனைக்கு அனுப்பி வைத்தல் ஆகியவை மின்னணு மருத்துவ ஆவணங்களுக்கு பிறகு அதிகரித்ததாக காணப்படுகிறது எனினும், இந்த ஆய்வுகள். இந்த சிகிச்சை தலையீடுகளை சோதிக்கவில்லை மற்றும்/அல்லது புகைப்பிடித்தலை விட்ட மக்களின் எண்ணிக்கையில் எந்த உயர்வையும் காண்பிக்கவில்லை.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்