இதயத் தமனி நோய் (கரோனரி ஹார்ட் டிசிஸ், சிஹச்டி) என்பது நெஞ்சு வலி, மாரடைப்புகள், இதய அறுவை சிகிச்சைக்கான தேவை ஆகியவற்றை உள்ளடக்கும், மற்றும் அகால மரணம் மற்றும் இயலாமைக்கு இது ஒரு முக்கிய காரணமாய் இருக்கிறது. இதயத் தமனி நோயுடைய மக்களில், இறப்பு மற்றும் நோயின் நிலையைக் குறைப்பதற்கும் அதே போல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கம் கொண்ட விளக்கக் கல்வியானது, அந்நோயின் பராமரிப்பு கூறுகளில் ஒரு பொதுவான ஒன்றாகும். இதயத் தமனி நோய் கொண்ட நோயாளிகளில், இறப்பு, நோயின் நிலை மற்றும் ஆரோக்கியம்-தொடர்புடைய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மேல் விளக்கக் கல்வி தலையீடுகளின் தாக்கத்தை முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு போதுமான தகவல் இல்லை என்று இந்த திறனாய்வு காட்டுகிறது. இருப்பினும், எங்களின் கண்டுபிடிப்புகள் இதயத் தமனி நோயுடைய மக்கள் விளக்கக் கல்வியை உள்ளடக்கிய விரிவான மறுவாழ்வு சிகிச்சையைப் பெற வேண்டும் என்ற தற்போதைய வழிகாட்டுதல்களை பரந்த அளவில் ஆதரிக்கிறது. மிக அதிகமான நோய் தொடர்புடைய மற்றும் செலவு குறைந்த வழிகளில் இதயத் தமனி நோய்க்கான நோயாளி விளக்கக் கல்வியை வழங்கும் வழிகளைப் பற்றி மதிப்பிட மென்மேலும் ஆராய்ச்சி தேவையாய் உள்ளது.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.