கபவாதம் (Pneumonia), மூச்சுகுழாய் அழற்சி(Bronchitis) மற்றும் மூச்சுநுண்குழாய் அழற்சி(Brochiolitis) போன்ற கடும் நுரையீரல் நோய் தொற்றுகள் (கீழ்தள சுவாவசகுழாய் நோய் தொற்றுகள்-Lower respiratory tract infection)உலகம் முழுவதும் உள்ள இறப்புகளில் முதன்மயான காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. மேலும் இவை 2030 அளவில் இறப்புகளுக்கு முதன்மையான நான்கு காரணங்களாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 59 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளும், 50 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் நோய் தொற்று உள்ளவர்கள் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் மற்றும் சளியினால் பாதிக்கப்படுகின்றனர். பெரும் வருவாய் ஈட்டும் நாடுகளில் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டோரை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் மார்பகஊடுகதிர் வீச்சு பொதுவாக பயன் படுத்தப்படுகின்றது. இருப்பினும், மார்பக ஊடு கதிர் வீச்சினால் நுரையீரல் தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களுக்கு ஏற்படும் பயன்பாட்டை குறித்து எதுவும் ஆராயப்படவில்லை. வேகமாக நோய் மீளுதல் தன்மை, குறுகிய மருத்துவமனை உள்ளிருப்பு காலம் மற்றும் குறைந்த நோய் கோளாறுகள் போன்ற மேம்பட்ட விளைவு பலன்களில் ஊடுகதிர் வீச்சுப்பயன்பாடு மற்றும் அதன் பயன்பாடு இல்லாத நிலைகள் பற்றி நாங்கள் கூர்ந்து ஆராய்ந்தோம். மருத்துவர்களின் வேறுபட்ட ஊடுகதிர் வீச்சு பொருள் விளக்கத்தையோ அல்லது நுரையீரல் நோய் தொற்றுகளில் நோய் நாடலின் கருவியாகவோ ஊடுகதிர்வீச்சின் பயன்பாட்டை நாங்கள் ஆராயவில்லை.
இரண்டு சோதனைகளை கொண்ட இந்த திறனாய்வில் மொத்தம் 2024 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டனர். அமெரிக்காவிலிரிந்து 1983 இல் பிரசுரிக்கப்பட்ட சோதனை முடிவு பெரியவர்கள் குறித்தும் 1998 இல் தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த இரண்டு சோதனைகளுமே பெரும் நகரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு சோதனைகளின் முடிவுகளின் தரவுகள் முழுமையற்று இருந்ததால் எங்களால் அவற்றை ஒருங்கிணைக்க இயலவில்லை. எனினும், இவ்விரு ஆராய்ச்சிகளின் முடிவுகள் மார்பக நோய் தொற்றுகளில் ஊடு கதிர் வீச்சின் பயன்பாடு, ஊடுகதிர்வீச்சு படத்தில் ஊடுருவி பரவும் நோய் தொற்றுடைய உட்பிரிவினரை தவிர மற்றவர்களிடையே ஒன்றாகவே உள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே ஊடுகதிர்வீச்சு, நோய் மீளுதல் காலத்தில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
சுருக்கமாக கூறினால், மார்பக ஊடுகதிர் மற்றும் மார்பக ஊடுகதிர் இல்லாத நோயாளி பிரிவுகளிடையே உள்ள விளைவு பலன்களில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்விரு ஆய்வுகளிலும் மார்பக ஊடுகதிரின் விளைவுபலன்களில் நோயாளிகளிடம் மாற்றம் எதுவும் இல்லை, எனினும் இம்முடிவுகள் அனைவருக்கும், அணைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் என்று கூற இயலாது. வளங்களில் பின்தங்கிய நாடுகளில் முடிவுகள் மாறுபட வாய்ப்புள்ளது. போதிய தரவுகள் இல்லாததாலும் மற்றும் ஒருதலைபட்சமாக செய்த ஆராய்ச்சி வழிமுறைகளாலும் எங்களுடைய முடிவுகள் முழுமையாக ஏற்றுக்கொள்வதை தடுக்கிறது. மார்பகஊடு கதிர்களின் பக்க விளைவுகள் இவ்விரு ஆய்வுகளிலும் ஆராயப்படவில்லை. இவ்விரு ஆய்வுகளின் முடிவுகளின் தரம் மிதமானதென என்று நாங்கள் மதிப்பிட்டோம். இந்த திறனாய்வில் எஞ்சியுள்ள பகுதிகளில் ஊடுகதிர்கள் கதிர்வரைபடமாக கருதப்படும்.
பிப்ரவரி 2013 வரை இந்த ஆதாரங்கள் தற்போதையவை
மொழி பெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச ,பா. வெங்கடேசன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.