நாள்பட்ட கீழ்முதுகு வலி சிகிச்சைக்கான மருத்துவ செவியுணரா ஒலி

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

செவியுணரா ஒலி என்பது அதிர்வுகளை பயன்படுத்தி வெப்பம் மற்றும் ஆற்றலை கீழ்முதுகின் பகுதிகளான, முதுகு தசைகள்,தசைநார்கள், தசை நாண்கள் மற்றும் எலும்புகளுக்கு வழங்கும் சிகிச்சையாகும். இதன் நோக்கம், வலியை குறைத்தல் மற்றும் குணமடைதலின் வேகத்தை அதிகரித்தலாகும். நாள்பட்ட கீழ்முதுகு வலி என்பது 12 வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் கீழ்முதுகு வலியை குறிக்கிறது.

திறனாய்வின் கேள்வி: நாள்பட்ட கீழ்முதுகுவலிக்கு செவியுணரா ஒலி சிகிச்சை ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையா?

செவியுணரா ஒலி சிகிச்சையை மற்ற சிகிச்சையுடன் ஒப்பிட்டுச் செயப்பட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு (இது ஒரு வகையான ஆய்வு) ஆய்வுகளை நங்கள் கண்டறிந்தோம். இந்த ஆய்வில் பங்கு பெற்ற (18 வயது அல்லது அதற்கு மோற்பட்வர்கள்)அனைவரும் நாள்பட்ட குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள். நாள்பட்ட குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகு வலி எண்பது காரணம் இல்லாமல் 12 வாரங்களுக்கு மேல்நீடிக்கும் முதுகு வலி.

ஒப்பீடு சிகிச்சைகள் உடற்பயிற்சி, மின் சிகிச்சைகள், முதுகு மூட்டு இழுத்துப்பொருத்தல் (manipulation) மற்றும் "மருந்தற்ற குளிகை சிகிச்சைகள்" உள்ளடங்கியது. மருந்தற்ற குளிகை சிகிச்சைகள் "போலி சிகிச்சைகள்" என்றும் அழைக்கப்படும் மருந்தற்ற குளிகை சிகிச்சைகள்,உண்மையான சிகிச்சை விளைவு ஏற்படுத்தாத சிகிச்சை முறைகளாகும். அதாவது செவியுணரா ஒலி, அதை உருவாக்கும் இயந்திரத்தை அணைத்துவிட்டு கொடுப்பது.

இந்த ஆய்வுகளில் செவியுணரா ஒலி சிகிச்சை பெற்ற நோயாளிகள் பொதுவாக 6 முதல் 18 முறை சிகிச்சை பெற்றவர்கள்.

செவியுணரா ஒலி சிகிச்சை வலி, வாழ்க்கை தரம், நோயாளிக்கு திருப்தி, அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், மற்றும் பணி செய்தல், ஆகியவற்றை மேம்படுத்த உதவியாக இருந்ததா என நாங்கள் கண்டடறிய விரும்பினோம்.

பின்புலம்:

உலகமெங்கும் உள்ள மக்களுக்கு,வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் வலியையும், சிக்கல்களையும் உண்டாகுகிற ஒரு பொதுவான காரணமாக விளங்குவது, நாள்பட்ட கீழ்முதுகுவலி. அநேக வேளைகளில், நாள்பட்ட கீழ்முதுகுவலி, மக்களை, மருத்துவப் பராமரிப்பை நாட வைக்கிறது, தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வைக்கிறது, மேலும் தங்கள் பணிக்கு செல்லாமல்மல் கூட தடுக்கககூடும்.

சிகிச்சைக்கான செவியுணரா ஒலி மருத்துவம் ஒரு பரவலாக பயன்படுத்தப்படும் கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை ஆகும். செவியுணரா ஒலி சிகிச்சை,நோயாளியின் கீழ்முதுகு மேல் உள்ள தோல் மீது கையடக்க சாதனம் கொண்டு தேய்ப்பதன் மூலமாக மருத்துவர்களால் வழங்கப்படுகிறது. இந்த சாதனம் தோல் வழியாக செல்கிறது என்று அதிர்வுகளை உற்பத்தி செய்கிறது. இதன் குறிக்கோள், வெப்பம் மற்றும் ஆற்றலை தோல் கீழ் உடல் பாகங்களுக்கு அனுப்பி, வலியை குறைத்து மற்றும் மீட்சிக்காலத்தை குறைப்பது. செவியுணரா ஒலி சிகிச்சை ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையா என்பது இல்லை.

ஆய்வு பண்புகள்

அக்டோபர், 2013 வரை வெளியிடப்பட்ட ஆய்வுகள் (சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள்) தேடினோம். நங்கள் 362 வயது வந்து நாள்பட்ட கீழ்முதுகுவலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் கொண்ட, ஏழு சிறிய ஆய்வுகள் கண்டறிந்தோம். இந்த ஆய்வுகளில் அனைத்து நோயாளிகளுக்கும் "குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகு வலி" இருந்தது.

வலியின் தீவிரம் மற்றும் தினசரி நடவடிக்கைகள் திறனின் அடிப்படையில் வகைப்படுத்துகையில் பெரும்பாலான நோயாளிகளுக்கு இலேசானது முதல் மிதமானது பாதிப்புடன் இருந்தது.

அனைத்து ஆய்வுகளும் "இரண்டாம் நிலை சுகாதார" அமைப்பில் நடத்தப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நோயாளிகள் அனைவரும் மருத்துவர் அல்லது பிற சுகாதார வல்லுநர்கலால் சோதனை செய்யப்பட்டுபின் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த திறனாய்வில் மதிப்பீடு செய்பட்டஆய்வுகள் மற்ற சிகிச்சைகளுடன் செவியுணரா ஒலி சிகிச்சையை ஒப்பிட்டது.

பெரும்பாலான ஆய்வுகள் குறுகிய கால மட்டுமே நோயாளிகள் சிகிச்சைக்கு பின் தொடரப்பட்டார்கள். வேறுவிதமாகக் கூறினால்,அவர்கள் ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே நோயாளிகள் சிகிச்சைக்கு பின் தொடரப்பட்டார்கள். நாட்பட்ட முதுகுவலிக்கு சிகிச்சையின் திறனை ஆய்வு செயும் ஆராய்ச்சிகள் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் நோயாளிகள் தொடரப்பட வேண்டும்.

ஆய்வுகள் எதுவும் வணிகரீதியில் நிதியுதவி பெறவில்லை.

முக்கிய முடிவுகள்

செவியுணரா ஒலி சிகிச்சை, கீழ்முதுகு வலிக்கான ஒரு பயனுள்ள சிகிச்சை என்பதற்கு எந்த உறுதியான சான்றுகளையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. செவியுணரா ஒலி சிகிச்சை, நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பதற்கு எந்த உயர் தரமான சான்றுகளும் இல்லை.

முதுகு தொடர்பான செயல்பாட்டை (முதுகை பயன்படுத்தும் திறன்) மேம்படுத்த, செவியுணரா ஒலி சிகிச்சை பயன்படும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளது என நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆனால், அந்த பயன்கள் நோயாளிகளின் வாழ்க்கையில் எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாத அளவுக்கு சிறிய பயன்களாக இருந்தன

இந்த ஆய்வுரையில் உள்ளடக்கிய ஆய்வுகள்,செவியுணரா ஒலி சிகிச்சை பாதுகப்பானதா, அதாவது காயங்கள் அல்லது வேறு தீங்கு நிகழ்வுகள் ஏற்படுமா என்பது குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை.

எனவே, எங்களால் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நாட்பட்ட முதுகுவலிக்கு செவியுணரா ஒலி சிகிச்சையின் பயன்களை தீர்மானிக்க முடியாது.

சான்றின் தரம்

செவியுணரா ஒலி சிகிச்சைக்கான பயன்கள் தொடர்பான சான்றுககளின் தரம் இன்னும் உயர்வாக இருந்திருந்தால் சிறப்பு. இந்த ஆய்வுரையில்,முதுகு தொடர்பான செயல்பாடு தொடர்பாக, நடுத்தரமான தரம் கொண்ட சான்றுகள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மற்ற விளைவுப்யன்கள் தொடர்பான சான்றுகள் "குறைந்த" அல்லது "மிகவும் குறைவு" தரம் கொண்டது. பெரிய மற்றும் சிறந்த ஆய்வுகள் மூலமான ஆராய்ச்சிகளுக்கான தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க.ஹரிஓம், வை. பிரகாஷ்,மோ. ந.தீபா மோகன்பாபு மற்றும் சி.இ.பி.என்.அர் குழு