இதயநாள நோயானது மாரடைப்புகள் மற்றும் பக்கவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும், மற்றும் அகால மரணம் மற்றும் இயலாமைக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இந்த திறனாய்வு, முதலில், 2011-ல் வெளியான திறனாய்வின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். உணவுகளில் உப்பை குறைத்து அதற்குப் பதிலாக குறைந்த-சோடியம் உப்பை சேர்த்துக் கொள்ளுவதற்கு அளிக்கப்படும் தீவிர ஆதரவும், ஊக்குவிப்பும் இதயநாள நோய் அபாயத்தை குறைக்குமா என்பதை மதிப்பிட இந்த திறனாய்வு முயல்கிறது. இந்த மேம்படுத்தல் இரண்டு புதிய ஆய்வுகளை உள்ளடக்கி மற்றும் ஒரு முரண்பாடான ஆய்வை நீக்கி, மொத்தம் 7284 பங்கேற்பாளர்களைக் கொண்ட எட்டு சோதனைகளைக் கொடுத்தது.
உணவுமுறை ஆலோசனை மற்றும் உப்பு மாற்று ஆகியவை உட்கொள்ளப்பட்ட உப்பின் அளவைக் குறைத்ததானது ஆறு மாதங்களில் இரத்த அழுத்தம் சிறிதளவு குறைய வழிவகுத்தது. இதயநாள நோய் நிகழ்வுகளுக்கான நன்மைக்கு வலுவற்ற ஆதாரமுள்ளது. ஆயினும் இந்த கண்டுபிடிப்புகள் அறுதியற்றதாயும் , இல்லங்களின் சமையல் அறைகளில் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்தது என்று முதியோர் ஓய்வகங்களில் வசிப்பவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சோதனையால் மட்டும் இயக்கப்பட்டதாயும் இருக்கிறது .
உப்பைக் குறைக்க வேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனை அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதை எங்கள் திறனாய்வின் கண்டுபிடிப்புகள் அர்த்தப்படுத்தவில்லை.எனினும், கூடுதலான நடவடிக்கைகள் - எடுத்துக்காட்டாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மறைந்துள்ள உப்பின் அளவை குறைத்தல் போன்ற செயல்கள் ஓர் குறைந்த உப்புள்ள உணவுத் திட்டத்தை மக்கள் அடைவதை மிகவும் எளிதாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, பல சோதனைகள் அவற்றின் பாரபட்சமான ஒருதலைச்சார்பு அபாயத்தின் ஆற்றலை மதிப்பிடுவதற்கு தேவையான போதுமான விவரத்தை தெரிவிக்க தவறிவிட்டன. பொது சுகாதார கொள்கைகளுக்கு பேருதவியாக, மருத்துவரீதியான நிகழ்வுகளின் மேல் உணவில் உப்பைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகளின் விளைவுகளைப் பற்றியதான கூடுதலான ஆதாரங்கள் செய்முறை மற்றும் கண்காணிப்பு ஆய்வுகள் மூலமாக தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.