இருதய அசாதாரண ஒழுங்கோசை நிறுத்ததுவதில் வால்சல்வா (Valsalvaa) உத்தியின் திறன்.

சுப்ராவென்றிகுலார் மிகை இதயத்துடிப்பு (supraventricular tachycardia SVT) என்பது வேக இதயத்துடிப்பாக வெளிப்படுத்தப்படும் ஒரு பொதுவான இதய பிறழ்தல். இந்த இதய துடிப்பு இடையூறுகள் ஆரோக்கியமான நபர்களில் கூட ஏற்படலாம் மற்றும் மார்பு வலி, படபடப்பு, மூச்சு திணறல், வியர்வை, மயக்க உணர்வு ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். அரிதான சமயங்களில் மயக்கம் நிலையை கூட ஏற்படலாம். பொதுவாக SVT சிகிச்சைக்கு உடல் அழுத்த உத்தி (also known as vagal manoeuvre), மருந்துகள் அல்லது மின் சிகிச்சை (கடுமையான சந்தர்ப்பங்களில் இரத்த அழுத்தம் குறையும் போது பயன்படுத்தப்படும்) கலவையாக அளிக்கப்படும். வேகல் உத்தி (Vagal manoeuvre) என்பது ஒரு உடல் மூலமான சிகிச்சையின் விளைவாக 10 வது மண்டையோட்டு நரம்பு (vagal nerve) தூண்டல் ஏற்படுத்துவதாகும். இந்த தூண்டலின் விளைவாக SVT அமைப்பில் இதய துடிப்பு வேகத்தை குறைக்கலாம். அத்தகையான உத்தியான வல்சல்வா (Valsalvae) உத்தி, நோயாளி படித்த நிலையில் ஒரு பீற்றுக்குழலில் 15 வினாடிகள் தொடர்ந்து ஊதுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த செய்கை மார்பு குழியில் உள்ள அழுத்தத்தை அதிகரித்து இதய துடிப்பை குறைக்க தூண்டி அசாதாரண இதய ஒழுங்கோசையை நிறுத்தலாம். இந்த திறனாய்வு, VM அசாதாரண இதய துடிப்பை மறுசீரமைப்பதில் (மறுசீரமைப்பு வெற்றி (revision success) என்று அழைக்கப்படும்) எவ்வளவு திறனுள்ளதாக இருக்கிறது என்பதை அறியா தற்போது உள்ள சான்றுகளை ஆராய்ந்தது . இந்த ஆய்வு 2013 இல் வெளியிடப்பட்ட அசல் பதிப்பின் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

மூன்று ஆய்வுகளில் மொத்தமாக 316 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வுரையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பகுப்பாய்வு முடிவுகள் மறுசீரமைப்பு வெற்றி (revision success) வாய்ப்பு விழுக்காடு19.4%லிருந்து 54.3% வரை இருக்கும் என்று காட்டியது. பக்க விளைவுகளின் தீவிரம் மற்றும் அவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் (likelihood) ஆகியவற்றை போதுமான தகவல்கள் இல்லாதலால் எங்களால் கணக்கிட முடியவில்லை. சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி மற்ற ஆராய்ச்சிகளில் வெளிவந்துள்ளன; இதில் குறைந்த இரத்த அழுத்தம் (திடிரென இரத்த அழுத்தம் குறைவது) அல்லது உணர்விழப்பு (நனவு இழப்பு ) போன்றவை குறிப்படத்தக்கது. இந்த பகுப்பாய்வில் உள்ளடங்கிய மூன்று ஆய்வுகளிலும் எந்த பக்க விளைவுகளும் பதிவு செய்யப்படவில்லை. ஒவ்வொரு VM நிறைவு பெரும் போது இந்த மூன்று ஆய்வுகளில் மறுசீரமைப்பது வெற்றி (revision success) அடையப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, VM எளிதான, அசாதாராண இதயத்துடிப்பு நிறுத்தும் துளையிடு அல்லாத (non -invasive) உத்தி என்று தோன்றுகிறது. ஆனால் இதன் பாதுகாப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனின் அளவு ஆகியவற்றை கணக்கிடுவது கடினமானது. இந்த முறையை பற்றிய ஆதாரங்களை மேம்படுத்த மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பா. ஜெயலக்ஷ்மி மற்றும் சி. இ.பி. என். அர் குழு

Tools
Information