மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound)

மணிக்கட்டு குகை வழியாக செல்லும் இரண்டு பிரதான நரம்புகளுள் ஒன்று அழுத்தப்படுவதால், கை,மணிக்கட்டு, சிலநேரங்களில் முன்கை, கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகியவற்றில் கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்றவை ஏற்படும் பொதுவான நிலையே மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு (Carpal tunnel syndrome) ஆகும். முற்றிய நிலையில் சிலருக்கு கை தசைகள் பலவீனமாகலாம். பொதுவாக பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு உண்டாகிறது. பலர் இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இருப்பினும் சிலவேளைகளில் சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) போன்ற மற்ற சிகிச்சை முறைகளும் அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குரிய செவியுணராஒலி சிகிச்சையில் ஒரு வட்ட வடிவ கருவி மூலம் வலியுள்ள பகுதியில் உள்ள தோல் வழியாக ஒலிஅலைகள் அனுப்பப்படுகிறது. அடித்தளத்தில் உள்ள திசுக்கள் இந்த ஒலி அலைகளை உறிஞ்சி வலி மற்றும் இயலாமையைக் குறைக்க உதவும். சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலியின் (ultrasound) பாதுகாப்பு மற்றும் பயனை மதிப்பீடு செய்த 443 பங்கேற்பாளர்கள் கொண்ட 11 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் தேடி கண்டறிந்தோம். சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் சிலவற்றில் சார்பு ஆபத்து (risk of bias) குறைவாகவும், மற்றவற்றில் தெளிவற்றும் அல்லது அதிகமாகவும் இருந்தது. மணிக்கட்டுக் கால்வாய் கூட்டறிகுறி கொண்டவர்கள் சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி, மருந்துப்போலியைக் காட்டிலும் குறுகிய அல்லது நீண்ட கால அறிகுறி மாற்றங்கள் உண்டுபண்ணுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு மிகவும் வரையறுக்கப்பட்ட தரவுகளில் இருந்து பெறப்பட்ட குறைந்த தர ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி சிகிச்சை அளிப்புத் திட்டம் மற்றொரு திட்டத்தை விட பெருவாரியாக பயன்அளிக்கும் என்பதற்கு ஆதரவாகவோ அல்லது சிம்பு அணிதல், உடற்பயிற்சி, வாய்வழி மருந்துகள் போன்ற அறுவை சிகிச்சை அல்லாத தலையீடுகளோடு ஒப்பிடுகையில் சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி சிகிச்சை பெருமளவு பயனூட்டு கொண்ட சிகிச்சையாக பயன்படுத்தலுக்கு ஆதரவாகவோ, போதுமான சான்றுகள் இல்லை. சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலியின் (ultrasound) பக்க விளைவுகளை சில ஆராய்ச்சிகள் மட்டுமே அளவிட்டன. மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) குறிப்பாக நீண்டகால அடிப்படையில் திறனானது மற்றும் பாதுகாப்பானது என்று கண்டறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information