பக்கவாதிற்குபின் பின்வரும் ஸ்பச்டிசிட்டிக்கு பல்முனைத் புனர்வாழ்வு சிகிச்சை

பக்கவாதமானது, பாதிக்கப்பட்ட கை அல்லது காலில்,வலி மற்றும் அசாதாரண பொருத்துதலோடுக் கூடிய, தசை விரைப்பு,பிடிப்பு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக,கை கால்களை அன்றாட நடவடிக்கைகளில் பயன்படுத்துவதிலோ, அல்லது பாதிக்கப்பட்ட அவையவங்களை பராமரிப்பதிலோ, சிரமங்கள் ஏற்படலாம். போடுலினும் நச்சு (botulinum toxin ), மற்றும் தசைகளை செயலிழக்கச் செய்யும் இதர ஊசி மருந்துகள், சபச்டிசிட்டி சிகிச்சைகளுள் அடங்கும். இத்தகைய சிகிச்சைகளை தொடர்ந்து, (வழக்கமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்) பன்முனை புனர்வாழ்வு திட்டம், செயல்படுத்தப்படும். இளகள், சிம்புகட்டுதல், நடை பயிற்சி, கரங்களை வேலை செயும்படி மீண்டும் மீண்டும் பழக்குவிப்பது மற்றும் ஆர்தொசிஸ் போன்ற சிகிச்சை முறைகள், இதில் அடங்கும். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவையவத்தின் பயன்பாடு, அல்லது பொருத்துதலில் (positioning) முன்னேறத்தை ஏற்படுத்த,அல்லது பாதிக்கப்பட்ட அவையவத்தை பராமரிப்பதை எளிதாக்க இவ்வகை சிகிச்சை முறைகள், சபச்டிசிட்டி, குறைக்கும் நோக்கத்துடன் அளிக்கப்படுகிறது. அது போன்ற திட்டங்களின் விளைவு பயன்கள், பாதிக்கபட்டோருக்கு அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் முக்கியமான, செயல்பாட்டை எட்டுவதை இலக்குகளாக கொண்டிருக்கும். பக்கவாதத்தினால் பாதிகப்பட்ட 91 நபர்களின் கைகளில் போடுலினும் ஊசி குத்தியப்பிறகு அளிக்கப்பட்ட, பலவிதமான பன்முனை மறுவாழ்வு தலையீடுகளைப் பற்றி ஆராய்ந்த 3 பொருத்தமான ஆய்வுகளை, நாங்கள் இந்த திறனாய்வில் சேர்த்துள்ளோம். சபச்டிசிட்டியை சரி செய்ய, பாதிக்கப்பட்ட கைகளை கட்டாயமாக பயண்படுத்த செய்யும் தீவிரப் பயிற்சிக்கு, குறைந்த தர சான்றுகளும், தொழில்முறை பயிற்சியுடன்கூடிய முழங்கை சிம்புகட்டுதளுக்கு, மிக குறைந்த தர சான்றுகளும் இருந்தன. நாங்கள், குழந்தைகளுக்கு பக்கவாதத்தால் ஏற்பட்ட ச்பச்டிசிட்டிக்கு பன்முனை புனர்வாழ்வு, அல்லது மற்ற மருந்து ஊசிகள் கொண்டு செய்த ஆய்வுகளை, அடையாளம் காணவில்லை. இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகள் குறைந்த எண்ணிக்கையுடன், ஆராய்ச்சி வழிமுறைகளில் குறைபாடுடைய ஆய்வுகள் மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. பக்கவாதத்திற்கு பின் வரும் சபச்டிசிட்டியை கையாளுவதற்கு, எந்த வகை புனர்வாழ்வு வழிமுறை, மற்றும் சிகிச்சைமுறையும், சிறப்பானவை என்று தெரிந்து கொள்ள அதிக அளவு ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க. அழகுமூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information