உலகம் முழுவதும் பல குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிக எடை அல்லது உடல்பருமனுடன் இருக்கிறார்கள். அதிக எடை அல்லது உடல்பருமனுடைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் நோய் மற்றும் உணர்ச்சி துன்பம் (emotional distress) அதிகமுடன் காணப்படுகின்றனர் அவர்கள் சிந்தனை சோதனைகளில் (அறிவாற்றல் திறன்) குறைவாக, மற்றும் அவர்கள் பள்ளியில் நன்றாக செய்யபட முடிவது இல்லை. உடல் பருமன் அதிகமாதலை தடுக்கவும் அதை சரி செய்யவும் பல வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது, உதாரணமாக எப்போதும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இறுத்தல் , குறைவான கலோரி கொண்ட உணவை உட்கொள்ளுதல் மற்றும் குறைந்தநேரம் உட்காருதல். இந்த தலையீடுகள் சிந்தனை திறமையை அதிகப்படுத்துகிறது மற்றும் பள்ளிகளில் சாதனைகளை அதிகபடுத்துகிறது என்பதை சரியான எடை கொண்ட குழந்தைகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விளைவுகள் அதிக எடையுள்ள அல்லது உடல் பருமனான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடம் அதே மாதிரியானதா என்பது தெரியவில்லை.
ஆய்வு ஆசிரியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்டகுழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை வாழ்க்கைமுறை தலையீடுகள் ( உடல்ரீதியான மிகவும் சுறுசுறுப்பாக இறுக்க வைத்தல், அல்லது உணவு பழக்கத்தை சரிசெய்தல் மற்றும் குறைந்த நேரமே உட்க்காருதல்) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட( வழக்கமான தலையீடு ,எந்த தலையீடும் இல்லாமல் ) குழுவில் தோராயமாக சேர்த்து பள்ளியில் சாதனை, அறிவாற்றல் திறன், பிற்காலத்தில் சாதனை (உதாரணமாக வருவாய் ,வேலை ) ஆகியவற்றை பற்றி மதிப்பீடு செய்த ஆராய்ச்சிகளை தேடினார்கள். மொத்தம் 674 அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்டகுழந்தைகள் பங்கேற்ற 6 சம்பந்தப்பட்டஆய்வுகளை கண்டறிந்தோம்.
அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்ட குழந்தைகளிடம் வழக்கமான பள்ளி செயல்களுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் , வாழ்க்கைமுறை கல்வி போன்ற குறிக்கோள் கொண்ட பள்ளி சார்ந்த தலையீடுகளில் சிறிதளவு முன்னேற்றமே காணப்பட்டது உடல் செயல்பாடு அதிகமாகும்போது ஞாபகசக்தி மற்றும் கணித சோதனைகளிலும் , பிரச்னையை தீர்ப்பதற்குரிய திறமைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. தெளிவான சான்றுகள் வாசிப்பு, மொழி அல்லது சொல்லகராதி தொடர்பான மற்ற சிந்தனை திறன்களில் விளைவை தருகிறது என்பதற்கு இல்லை நாங்கள் வாழ்க்கை தலையீடுகள் பாடசாலையை விட்டு விலகிய பின்னர் சாதனைகளை பாதிக்கிறதா என்பதை ஆராய்ந்த ஆய்வுகளை கண்டறியவில்லை.
மொத்தத்தில் குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் பற்றி அதிக அளவில் ஆய்வுகள் இருந்தாலும் , குறைந்த அளவு ஆய்வுகளே பள்ளியில் சாதனை படைத்தல் மற்றும் புலனுணர்வு (அறிவாற்றல் ) செயல்பாடுகளில் உடல் பருமனுக்கான தலையிடுகளின் தாக்கத்தை (விளைவுகளை ) மதிப்பீடுசெய்துள்ளன. இருக்கின்ற ஆய்வுகள் தரத்தில் குறைந்தவையாக உள்ளன.ஆனால் வாழ்க்கை முறை தலையிடுகள் அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு ஒட்டுமொத்த பள்ளி சாதனைகள் ,கணிதம் ,நினைவு திறன் ,குறிப்பிட்ட சிந்தனை திறன் ஆகியவற்றிகு உபயோகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கின்றன சுகாதார கொள்கை வகுப்பாளர்கள் பள்ளிகளில் உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் போது கிடைக்கும் இந்த சாத்தியமான கூடுதல் நன்மைகளை கருத்தில் கொள்ள விரும்பலாம் . எதிர்கால உடல் பருமன் சிகிச்சை ஆய்வுகள் கல்வி மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றுடன் உடல் விளைவுகளை கருத்தில் கொள்ளலாம்
மொழிபெயர்ப்பு: கா.அழகு மூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு