Interleukin-2 ஆனது எச்ஐவி-நேர்மறை பெரியவர்களுக்கு antiretroviral சிகிச்சையின் ஒரு இணைப்பு.

ஏன் இந்த மறுஆய்வை செய்தோம்?

எச்.ஐ.வி ஆனது இன்னும் மரணத்திற்க்கு முக்கிய காரணியாக உலகளாவிய ரீதியில் உள்ளது, குறிப்பாக ஆப்பிரிக்காவில். இரத்தத்தில் எச்.ஐ.வி பெருக்கமடைந்து மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. ஆகவே, எச்.ஐ.வி-நேர்மறை, ஒருவருக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நோய்த்தொற்று ஏற்படுத்துகிறது. தற்போதைய மருந்து சிகிச்சை, antiretroviral therapy (ART), வைரஸ் பெருகுவதைத் தடுத்து நிறுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மீட்கிறது. Interleukin- 2 (IL-2) என்பது உடலில் ஒரு புரதம் இது நோய்த்தொற்றுக்கு எதிராக இரத்த வெள்ளை அணுக்களின் பெருக்க செயல்முறைக்கு உதவுகிறது. இருப்பினும், IL-2 வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்கிறது இவற்றை அதிகரிப்பதன் மூலம் ARTயின் பயன்பாட்டிற்கு கூடுதல் நன்மைகள் சேர்க்க முடியுமா என நமக்கு தெரியாது. இந்த கோக்ரேன் ஆய்வின் நோக்கமானது, antiretroviral therapy (ART) யுடன் கூடுதல் சிகிச்சையைப் பயன்படுத்துவது, அதாவது IL-2, ஒப்பிடும்போது,தனியாக ART ஐ பயன்படுத்தி எச்.ஐ. வி-நேர்மறை பெரியவர்களின் நோய் மற்றும் மரணத்தை குறைக்க முடியும்.

முக்கிய முடிவுகள்

IL-2 ஆனது CD4 நோயெதிர்ப்பு உயிரணுக்களில் அதிகரிப்பை ஏற்படுகிறது என்று கண்டறிந்தோம் (1 உயர் உறுதிப்பாடு சான்று 1). இருப்பினும், இறப்பு மற்றும் பிற நோய்த்தாக்குதல் போன்ற முக்கியமான விளைவுகளில் எந்த வித்தியாசமும் இல்லை (1 உயர் உறுதிப்பாட்டு சான்று 1). L-2 ஐ பயன்படுத்தி அந்த மக்களுக்கு பக்க விளைவுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது (1 மிதமான உறுதிப்பாடு சான்று 1). எச்.ஐ.வி-நேர்மறையான பெரியவர்களில் ART க்கு ஒரு கூடுதல் சிகிச்சை முறையில் IL-2 ஐப் பயன்படுத்துவதை எங்கள் கண்டுபிடிப்புகள் ஆதரிக்கவில்லை.

முக்கிய முடிவுகள்

26 மே 2016 அன்று ஒரு விரிவான தேடல் நடத்திய பிறகு, நாங்கள் ஆறு நாடுகளில் நடத்தப்பட்ட 25 தகுதி சோதனைகளை உள்ளடக்கியிருந்தோம். IL-2 குழுவிற்கும், ART மட்டும் ஆகியவற்றுக்கு இடையேயான இறப்பு எண்ணிக்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை (6 சோதனைகள், 665 பங்கேற்பாளர்கள், 1 உயர் உறுதிப்பாடு சான்று 1). 21 இல் 17 சோதனைகள், IL-2 ஐ பயன்படுத்தி CD4 செல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனியாக ART ஒப்பிடும்போது மொத்தத்தில், 50 cells/mL க்கு குறைவான ஒரு ஒடுக்கப்பட்ட வைரஸ் சுமை கொண்ட பங்கேற்பாளர்களின் விகிதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை (5 சோதனைகள், 805 பங்கேற்பாளர்கள், 1 உயர் உறுதிப்பாடு சான்றுகள் 1)அல்லது சோதனைகளின் முடிவில் 500 க்கும் குறைவான cells/mL. (4 சோதனைகள், 5029 பங்கேற்பாளர்கள், 2 உயர் உறுதிப்பாடு சான்றுகள் 2). மொத்தத்தில், சந்தர்ப்பவாத நோய்த்தாக்கங்களில் சிறியதாகவோ அல்லது வேறுபாடாகவோ இருக்கலாம் (7 சோதனைகள், 6141 பங்கேற்பாளர்கள், 1 குறைந்த உறுதிப்பாடு 1). ஒருவேளை தரம் 3 அல்லது 4 பாதகமான நிகழ்வுகளில் அதிகரிப்பு இருந்தது (6 சோதனைகள், 6291 பங்கேற்பாளர்கள், 1 மிதவாத உறுதிப்பாடு 1). தீங்குகளை பற்றி சேர்க்கப்பட்டிருந்த எந்த சோதனைகளும் அறிக்கையிடவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: CD009818.pub2

Tools
Information