இதய நாள நோயைத் தடுக்க அதிகப்படியான பழம் மற்றும் காய்கறியை உட்கொள்ளுதல்

இதய நாள நோய் (CVD) ஒரு உலகளாவிய சுமையாக உள்ளது மற்றும் உலக பிராந்தியங்களுக்கிடையே வேறுபடுகிறது. இந்த பிராந்திய வேறுபாடுகள் உணவு முறை காரணிகளோடு பகுதியளவில் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் குறைந்த பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளுதலால் அதிகளவிலான இதய நாள நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த திறனாய்வு, பிற உணவு முறைகள் அல்லது பிற வாழ்க்கை முறை மாற்றங்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமான பெரியவர்களில் அல்லது இதய நாள நோய் உயர் அபாயத்தைக் கொண்டவர்களில், இதய நாள நோயைத் தடுப்பதற்கான பழம் மற்றும் காய்கறி நுகர்வு அதிகரிப்பு என்ற ஒரு ஒற்றை தலையீட்டின் திறனை மதிப்பீடு செய்தது. நாங்கள் 1730 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 10 சோதனைகளைக் கண்டோம், அவற்றில் ஆறு ஆய்வுகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டதை ஆய்வு செய்தன; மற்றும் நான்கு சோதனைகள் பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளுதலை அதிகரிக்க வழங்கப்பட்ட உணவுமுறை ஆலோசனையை ஆய்வு செய்தன. கொடுக்கப்பட்ட பழம் மற்றும் காய்கறி வகையில் வேறுபாடுகள் இருந்தன, ஆனால் வழங்குதல் ஏற்பாட்டை சோதித்த அனைத்து தலையீடுகளும் ஒரே ஒரு பழம் அல்லது காய்கறி கூறை மட்டும் உள்ளடக்கியது. பங்கேற்பாளர்கள் சாப்பிட அறிவுறுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் இருந்தன. சில ஆய்வுகள், பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழம் மற்றும் காய்கறிகள் பரிமாறல்களை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தின, ஆனால் மற்றவைகள் ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு அல்லது ஒன்பது பரிமாறல்களாவது வேண்டும் என்று அறிவுறுத்தின. தலையீடுகளின் காலஅளவு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை விரிந்திருந்தன. சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில், மூன்றில் எதிர்மறையான விளைவுகள் பற்றி அறிக்கையிட்டிருந்தது, மற்றும் அவை அதிகரித்த குடல் இயக்கங்கள், கெட்ட சுவாசம் மற்றும் உடல் நாற்றத்தை சேர்த்தது. சேர்க்கப்பட்டிருந்த பரிசோதனைகள் எவையும் மாரடைப்பு போன்ற இதய நாள நோய் நிகழ்வுகளின் மேல் அதிகப்படியான பழம் மற்றும் காய்கறி நுகர்வின் விளைவைப் பற்றி ஆய்வு செய்யும் அளவிற்கு நீண்ட-காலக்கட்டம் கொண்டதாய் இருக்கவில்லை. ஒரே வகை பழம் அல்லது காய்கறி என்று வழங்கப்பட்டதானது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகள் மீது பயனுள்ள விளைவுகளைக் கொண்டிருந்ததாக எந்த வலுவான ஆதாரமுமில்லை, ஆனால், பெரும்பாலான சோதனைகள் குறுகிய-காலக்கட்டதிற்கு இருந்தன. பழம் மற்றும் காய்கறி நுகர்வை அதிகரிப்பதற்கான உணவுமுறை ஆலோசனை பயனுள்ள விளைவுகளை அளித்தது என்பதற்கு சில ஆதாரங்கள் இருந்தது, ஆனால் அவை இரண்டு பரிசோதனைகளின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டது. இந்த கண்டுப்பிடிப்புகளை உறுதிப்படுத்த அதிகப்படியான பரிசோதனைகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி

Tools
Information