திறந்த இதய அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கடும் வலி, மிக அலைக்கழிக்கும் புகார்களில் ஒன்றாகும், மற்றும் பலவீனப்பட்ட காயம் ஆறுதல், நாள்பட்ட வலி அல்லது மனச்சோர்வு ஆகிய எதிர்மறை விளைவுகளின் அபாயத்தோடு தொடர்புடையதாகும். நோயாளிகளின் நோய் பற்றிய 'அறிவை மேம்படுத்த மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான மன வேதனை, எதிர்மறை நம்பிக்கைகள் மற்றும் இணக்கமின்மை ஆகியவற்றை மாற்ற உளவியல் சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, வலி மற்றும் பதட்டத்தை குறைக்க, மற்றும் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்பை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் சிகிச்சையின் போது மற்றும் அதற்கு பிறகான மருத்துவ நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய உணர்வுகளை பற்றிய தகவல்களை வழங்குதல், மற்றும் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கு மருத்துவ ஆலோசனையை எவ்வாறு கடைபிடிப்பது என்பதற்கு அறிவுறுத்தல்கள்; வெவ்வேறு தளர்வு நுட்பங்களை நோயாளிகளுக்கு கற்பித்தல் அல்லது அறிவுறுத்தல்; அல்லது நோயாளிகளுக்கு, அவர்களின் சிந்தனை மற்றும் உணர்ச்சிகள் அவர்களின் நடத்தைகளை பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள உதவுவது ஆகியவற்றை உளவியல் சிகிச்சை கொண்டுள்ளது.
திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மக்களில், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கடும் வலியை வெற்றிகரமாக குறைக்கவும் மற்றும் உடற் மற்றும் உளவியல் மீட்சி போக்கை மேம்படுத்த முடியுமா என்பதை இந்த திறனாய்வு விசாரித்தது. வலியின் தீவிரத்தன்மை, வலி மருந்துகள் பயன்பாடு, மன வேதனை, இயக்கம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய குழல் செலுத்துதலின் கால அளவு மீது, கட்டுப்பாட்டு குழுவோடு ஒப்பிட்டு, உளவியல் சிகிச்சையின் விளைவுகளை அறிக்கையிட்ட, மொத்தம் 2164 பங்கேற்பாளர்கள் சம்மந்தப்பட்ட 19 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். உளவியல் சிகிச்சை, திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலியின் தீவிரத்தை குறைத்தது அல்லது இயக்கத்தை மேம்படுத்தியது என்பதற்கு நாங்கள் ஆதாரத்தை கண்டுபிடிக்கவில்லை. மன வேதனையை குறைப்பதில் வழக்கமான பராமரிப்பை விட உளவியல் சிகிச்சை சற்று சிறப்பாக இருந்தது என்று நிரூபித்தது. உளவியல் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குழல் செலுத்துதலின் கால அளவை குறைக்க வழிவகுக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. உளவியல் சிகிச்சையின் எந்த பாதகமான விளைவை பற்றியும் எந்த முதன்மையான ஆய்விலும் விவரிக்கப்படவில்லை.
எனினும், ஆய்வுகளின் தரம் பொதுவாக, குறைவாக இருந்தது, மற்றும் ஆய்வுகளின் முடிவுகளிடையே மாறுபாடு இருந்தது. செப்டம்பர் 2013-ல் சமீபத்திய தேடல் நடத்தப்பட்டது.பெரும்பாலும், ஆய்வுகள் வெளி நிதி ஆதரவு அல்லது வணிகமல்லாத தேசிய அல்லது பிராந்திய ஆராய்ச்சி சங்கங்கள் அல்லது மாணவர் ஆதரவு ஊதியம் இல்லாமல் நடத்தப்பட்டது. ஈடுபாடு குறித்த முரண்பாடுகள் பற்றி எந்த ஆய்விலும் கூறப்படவில்லை.
அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலியை குறைப்பதற்கும் மற்றும் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்சியை மேம்படுத்துவதற்கும் உளவியல் சிகிச்சை ஆற்றல் கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மேற்படியான உயர்தர ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.