வயது வந்தவர்களில் கால்சியம் அடங்கிய சிறுநீரக கற்களை தடுக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் சிட்ரேட் உப்புகள்

சிறு நீர் பாதையின் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக கற்களாகும். அவை குறிப்பாக 40 முதல் 60 வரை வயதுடைய மக்களை தாக்கும் மற்றும், ஆண் பெண் இரு பாலரிலும் இதின் அபாய அளவு ஒரே மாதிரியாக இருக்கும் என்று சமீபத்திய தரவு பரிந்துரைத்தாலும், இவை பெண்களை விட ஆண்களில் இரண்டு மடங்கு அதிகமாக காணப்படுகிறது. கால்சியம் கற்கள், சிறுநீரக கற்களின் மிக பொதுவான வகையாகும் மற்றும் கால்சியம் ஆக்ஸ்லேட் மற்றும் கால்சியம் பாஸ்பேட் என்று இரண்டு பிரதான வடிவுகளில் அவை ஏற்படக் கூடும். சிறுநீரக கற்கள் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும் மற்றும் உடனடி சிகிச்சையின் தேவை ஏற்படும்; சிறுநீரகவியல் மருத்துவ நடைமுறையில் திட்டமிடப்படாத மருத்துவமனை அனுமதித்தல்களுக்கு முக்கிய காரணங்களில் இவை ஒன்றாகும்.

சிகிச்சையை தொடர்ந்து, முதன் முறையாக கற்கள் கொண்டவர்களுக்கு கூட மீண்டும் கற்கள் ஏற்படுவதின் அபாயம் உண்டாகும், இது ஒவ்வொரு தொடர்ச்சியான கற்களின் போது மேலும் அதிகரிக்கும். மீண்டும் கற்கள் ஏற்படுவதின் அபாயம், சிறு நீரின் மாறுபட்டு போன கலவை தன்மையோடு மிக முக்கியமாக சம்மந்தப்பட்டிருக்கும், உதாரணத்திற்கு, குறைந்த சிட்ரேட் மட்டங்கள். சிறுநீரின் வேதியல் கலவை தன்மையை சீர்படுத்துவதற்கு அதிகரிக்கப்பட்ட திரவ உட்கொள்ளல், மற்றும் வாய் வழி சிட்ரேட் உபச்சத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அநேக தடுப்பு யுக்திகள் முயற்சிக்கப்பட்டுள்ளன. சிட்ரேட் சிகிச்சை முறை, படிகங்களை கற்களாக வளர விடாமல் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. சிட்ரேட் சிகிச்சை முறையின் உண்மையான நன்மையை பற்றிய தெளிவற்ற நிலையே இந்த திறனாய்விற்கு வித்திட்டது.

இந்த திறனாய்வில் ஏழு ஆய்வுகளை (477 பங்கேற்பாளர்கள்) நாங்கள் இணைத்தோம். சிட்ரேட் உப்புகள், குறிப்பிடத்தகுந்த வகையில் கல்லின் அளவை குறைத்தன, புதிய கல் உருவாகுவதை தடுத்தன, மற்றும் கல்லின் அளவை நிலைப்படுத்தின. போலி மருந்தை பயன்படுத்துவதைக் காட்டிலும் , சிட்ரேட் உப்புகளை பயன்படுத்தும் போது அதிகமான இரைப்பை-குடலியல் தொந்தரவை மக்கள் அனுபவித்தனர். எனினும், சிட்ரேட் சிகிச்சை முறையினால் கல்லை நீக்குவதற்கான மறுசிகிச்சை தேவைப்படுவது குறிப்பிடத்தகுந்த வகையில் குறைவாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information