வயதான மக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்கான சிகிச்சை தலையீடுகள்

திறனாய்வு கேள்வி வயதான மக்கள் (60 வருடங்கள் அல்லது அதற்கு மேலும்) துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கான குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது யுக்திகள் பயனளிக்குமா என்பதை அடையாளம் காண்பதே எங்கள் திறனாய்வின் நோக்கமாகும். வயதான மக்கள் அல்லது அவர்கள் தொடர்பு கொள்ளும் பிற மக்களை (பராமரிப்பாளர்கள் அல்லது பராமரிப்பு இல்லங்களின் ஊழியர்கள்) நோக்கமாக கொண்ட இத்தகைய திட்டங்கள் அல்லது யுக்திகளின் விளைவு பற்றி விவரித்த ஆய்வுகளை சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்பினோம்.

பின்புலம்

வயதான மக்கள் துஷ்பிரயோகம்- உடல் ரீதியான துஷ்பிரயோகம், மன ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், பராமரிப்பின்மை, மற்றும் பொருளாதார ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை மிகவும் பொதுவானதாகும் ஆனால், இவை மிக குறைவாகவே பதிவிடப்படுகின்றன. வயதான மக்கள் துஷ்பிரயோகம் என்பது ஒரு முறை அல்லது திரும்ப திரும்ப ஏற்படுபவையாக இருக்கலாம் அல்லது பொருத்தமான நடவடிக்கையில்லாமல் இருக்கலாம். நம்பிக்கையுணர்வு எதிர்பார்க்கப்படும் ஒரு உறவுத்தொடர்பில் துஷ்பிரயோகம் ஏற்படக் கூடும், ஆனால் வருத்தற்குரியதாக, அது வயதான நபருக்கே தீங்கு அல்லது துயரத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர்கள் அல்லது கணவர்/மனைவி, துணை, குடும்ப நபர் அல்லது சிநேகிதர் போன்ற ஒரு உறவுத்தொடர்பு கொண்ட மக்களாலேயே துஷ்பிரயோகம் ஏற்படும். பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்களாலும் அவை ஏற்படக் கூடும். ஊழியர்களளுக்கு போதிய பயிற்சி மற்றும் மேற்பார்வை இல்லாத போது, அல்லது அவர்களின் பொறுப்புகளை எடுத்துக்கொள்வதற்கு போதிய வள வாய்ப்புகள் இல்லாத போதே இவை அதிகமாக ஏற்பட சாத்தியம் உள்ளது. இது, லட்சக்கணக்கான வயதான மக்களை பாதிக்கும் ஒரு உலகளாவிய பிரச்னையாகும். மேலும், தனி நபர்களுக்கும் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பிற்கும் அதிகமான பொருளாதார செலவுகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. துஷ்பிரயோகம், மோசமான உடல்நலம், காயங்கள் மற்றும் காலத்திற்கு முந்தைய மரணம் ஆகியவற்றுக்கும் வழி வகுக்கும்.

தேடல் தேதி

அனைத்து தரவுத்தளங்களும் ஆகஸ்ட் 2015 வரை தேடப்பட்டன. பிரதான தரவுத்தளங்களில், 30 ஆகஸ்ட் 2015 முதல் 16 மார்ச் 2016 வரை கூடுதலான தேடல்கள் நடத்தப்பட்டன.

ஆய்வு பண்புகள்19 தரவுத்தளங்களை நாங்கள் தேடிய போது 7 ஆய்வுகளை கண்டோம். மொத்தமாக, 1924 வயதான மக்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் 740 பிற மக்களை (பராமரிப்பாளர்கள் அல்லது பராமரிப்பு இல்லங்களின் ஊழியர்கள்) அவை கொண்டிருந்தன. வயதான மக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கான வழிமுறைகளை இந்த ஆய்வுகள் விவரித்தன. உயர் வருமான நாடுகளில் மட்டுமே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், அநேக வெவ்வேறு அமைப்புகளில் (வீடு, சமூகம், பராமரிப்பு இல்லங்கள்) நடத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் யுக்திகளை உள்ளடக்கின. மருத்துவ நடைமுறை மற்றும் சமூக அமைப்புகளில் கண்காணிப்பு, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு, வயதான மக்களில் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு, பராமரிப்பு வழங்குபவர்களில் திறன்களை வளர்ப்பதற்கென்று அளிக்கப்படும் பயிற்சி திட்டங்கள் போன்ற வழிமுறைகளை இந்த திட்டங்கள் மற்றும் யுக்திகள் அடையாளம் கண்டன. பெரும்பான்மையான ஆய்வுகள் அறிவு மற்றும் மனப்பாங்கில் மாற்றங்களை விவரித்தன. மிக குறைந்த ஆய்வுகளே துஷ்பிரயோகம் செய்யப்படும் நிகழ்வுகள் அல்லது மறுநிகழ்வுகள் போன்றவற்றை மதிப்பிட்டன. ஆய்வுகளின் கால அளவு ஆறு மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை நீடித்தன.

முக்கிய முடிவுகள்

இலக்கு கொண்ட விளக்க கல்வி சிகிச்சை தலையீடுகள் ஆரோக்கியம் மற்றும் துணை ஆரோக்கிய வல்லுநர்கள் மற்றும் பராமரிப்பாளர்களில் வயதான மக்கள் துஷ்பிரயோகம் பற்றிய பட்டறிவை மேம்படுத்தியதா என்பது தெளிவற்றதாக உள்ளது என உள்ளடக்கப்பட்ட ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. பட்டறிவு மேம்பட்டிருந்தால், அவர்களின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தியதா மற்றும் அதன் மூலம் வயதான மக்கள் குறைவாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்களா என்பது தெளிவாக இல்லை. அதே போல், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட வயதான மக்களை ஆதரிப்பது மற்றும் அவர்களுக்கு விளக்கக்கல்வி அளிப்பது துஷ்பிரயோகம் பற்றி அறிக்கையிடுவதை அதிகரித்தன என்று தெரிகிறது, எனினும்,அதிகரித்த அறிக்கைகள் அதிகமான துஷ்பிரயோகங்கள் நடந்தனவா அல்லது ஒரு துஷ்பிரயோகம் நடந்ததால் அதை அறிக்கையிடுவதற்கு அதிகமான தன்னார்வம் உண்டாகியதா என்பது தெளிவாக இல்லை.

இந்த அணுகுமுறைகளின் எதிர்பாராத விளைவுகளை பற்றி எந்த ஆய்வுகளும் அறிக்கையிடவில்லை.

சான்றின் தரம்பெரும்பான்மையான ஆதாரம் குறைந்த அல்லது மிக குறைந்த தரத்தை (இந்த ஆய்வுகளின் முடிவுகளை நாம் உண்மையென்று அனுமானிக்க முடியாது) கொண்டிருந்தது. ஆதலால், வயதான மக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கான எந்த திட்டங்கள் அல்லது யுக்திகள் சிறப்பானதாக இருக்கும் என்பதை பற்றிய நமது புரிதலை அவை கட்டுப்படுத்துகின்றன. அநேக ஆய்வுகள், அவற்றின் முடிவுகளில் முழு நம்பகத்தன்மை கொள்ள முடியாதபடி, மிக குறைந்த ஆய்வு மக்கள், அல்லது அவற்றின் முடிவுகளில் ஒப்புமை இல்லாமை என ஆய்வு வடிவமைப்பில் தெளிவற்றதாக இருந்தன,

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information