பின்னணி
காசநோயை (TB) குணப்படுத்த பல மருந்துகள் உள்ளன ஆனால் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு உருவாகும் விதம் ஒரு வளர்ந்து வரும் பிரச்சனையாகும். எதிர்ப்பு வினையுடைய காசநோய் மருந்தினை எடுப்பவர்கள் இரண்டாம் நிலை மருந்துகளை தேவைப்படும் நிலையில் முதல் நிலை காசநோய் மருந்துகளுடன் ஒப்பிடும்போது இரண்டாம் நிலை காசநோய் மருந்துகளை நீண்ட காலம் எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் இதன்நிமிதம் ஒருவேளை மேலும் அதிகமான பாதிப்புடன் தொடர்புடையவர்களாய் இருக்கலாம். எதிர்ப்பினை விரைந்து கண்டறிவது மிக முக்கியம், காரணம் உடல் நலனை சீராக்குதல், இறப்பினை குறைத்தல் போன்றவற்றிற்கு அத்தியாவசியமாகிறது.
பல்முக எதிர்ப்பினை கொண்ட காசநோய்க் கிருமிகள் சக்திவாய்ந்த TB மருந்துகளான Rifampicin மற்றும் isoniazid போன்றவற்றிற்கு multidrug TB (MDR-TB) எதிர்ப்பினை TB (MDR-TB) உருவாக்குகின்றன.
பரவலான மருந்து எதிர்ப்பு TB (MDR-TB) ஏறத்தாழ எல்லா காசநோய் மருந்துகளையும் எதிர்க்கும் திறன் வாய்ந்த TB ஆகும்.
இந்த ஆய்வு எந்த சோதனையை திறனாய்கிறது?
Genotype MTBDRs L TB இரண்டாம் நிலை TB மருந்துகளுக்கு உருவாகும் எதிர்ப்பினை கண்டறியும் விரைவு பரிசோதனை ஆகும். MDR-TBல் உள்ள நோயாளிகளிடம் மேலும் ஏற்படக்கூடிய மருந்து எதிர்ப்பினைக் கண்டறிய MTBDRs சோதனை பயன்படுகிறது. நோயாளியின் எச்சில்/கோழையிலிருந்து (மறைமுக பரிசோதனை) காசநோய்க் கிருமிகளை culture சோதனையில்லிருந்து பெற்று நடத்துதல் அல்லது நோயாளியளிக்கும் specimen மாதிரியிலிருந்து (நேரடி சோதனை) ஆராய்தல் culture உருவாக்கத் தேவையான காலதாமதத்தை தவிர்க்க உதவும். MTBDRsl version 1.0 microscope பரிசோதனைக்கு smear positive மாதிரி (specimen) தேவைப்படுகிறது. Version 2.0 (2015ல் வெளியிடப்பட்டது) இந்த வகை ஆய்வில் smear positive or negative specimenஐ பயன்படுத்தலாம்.
இந்த பரிசீலனையின் நோக்கம் என்ன?
நாங்கள் இந்த MTBDRsl மருந்து எதிர்ப்பினை எவ்வளவு துல்லியமாக அளக்க உதவுமென கண்டுபிடிக்க விரும்பினோம் நேரடி மற்றும் மறைமுக ஆய்வினை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினோம் மற்றும் இரண்டு சோதனை version-ஐ ஒப்பிட விரும்பினோம்.
இந்த பரிசிலனை (review) எவ்வளவு புதியது (update)?
நாங்கள் 21 செப்டம்பர் 2015 வரை வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளை தேடிப் பயன்படுத்தினோம்.
இந்த பரிசிலனையின் முக்கிய விளைவுகள் என்ன?
நாங்கள் 27 ஆய்வுகளை கண்டறிந்தோம், அதில் 26 ஆய்வுகள் MTBDRsl version 1.0வை மதிப்பீடு செய்த ஒரு ஆய்வு version 2.0 பற்றியது.
Fluoroquinolone மருந்துகள்
MTBDRsl version 1.0 (smear positive stain), 86% மக்கள் இரண்டாம் நிலை ஊசிமருந்து எதிர்ப்புடையவர்களாக கண்டறியப்பட்டனர். எதிர்ப்பு இல்லாத மக்களுக்கும் (GRADE, நடுத்தர சாட்சி) மிக அரிதாகவே நல்ல முடிவுகள்/விளைவுகளை அளிக்கிறது.
இரண்டாம் நிலை ஊசிமருந்துகள்
MTBDRsl version 1.0 (smear positive specimen), 87% மக்களுக்கு இரண்டாம் நிலை ஊசிமருந்துகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. எதிர்ப்பு மக்களுக்கு மிக அரிதாகவே நல்ல முடிவுகளை அளிக்கிறது (GRADE, குறைந்த தர சாட்சி).
XDR-TB
MTBDRsl version 1.0 (smear positive specimen), 87% மக்களுக்கு இரண்டாம் நிலை ஊசிமருந்துகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. எதிர்ப்பு மக்களுக்கு மிக அரிதாகவே நல்ல முடிவுகளை அளிக்கிறது (GRADE, குறைந்த தர சாட்சி).
MTBDRsl version 1.0 (smear positive specimen) 69% மக்கள் XDR-T உடையவர்கள் என கண்டறிந்தது, எதிர்ப்பு இல்லாத மக்களை அரிதாகவே கண்டறிந்தது (GRADE, குறைந்த தர சாட்சி)
For MTBDRsl version 1.0, நேரடி மறைமுக பரிசோதனைகள் இதே முடிவை smear positive specimenக்கு அளிக்கிறது. MTBDRsl version 2.0 பற்றி ஒரே ஒரு ஆய்வுதான் உள்ளது. version 2.0 துல்லிய கண்டுபிடிப்புடையதா என்பது பற்றி எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. மேலும் ஒரே ஒரு ஆய்வு உள்ளதால் வேறொன்றுடன் இதன் திறனை ஒப்பிட முடியவில்லை.
இந்த தர சாட்சி பற்றிய(evidence) ஆராய்ச்சி அணுகுமுறை(methodology) என்ன?
நாங்கள் தர அளவீடு துல்லிய ஆய்வு (QUADAS-21) எனும் கருவியை ஆய்வின் தரம் பற்றி சோதிக்க பயன்படுத்தினோம். ஆனால் எவ்வாறு பயன்படுத்தப்பட்ட அளவீடு (MTBDRsl bench markக்கு எதிராக அளவிடப்பட்டது) பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஐயங்கள் (concerns) எழுந்தது.
திறனாய்வு செய்தவர்களின் முடிவுகள் என்ன?
MTBDRsl (smear positive specimen) இரண்டாம் நிலை எதிர்ப்புடைய நோயாளிகளில் பெரும்பாலானவரை கண்டறிய உதவியது. இந்த சோதனை எதிர்மறை முடிவுகளை தெரிவித்தால் மருந்து எதிர்ப்பினைக் கண்டறியும் வழக்கமான சோதனையை பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வசந்த், ஜாபெஸ் பால்]