ஆராய்ச்சி கேள்வி
எவ்வகை சிகிச்சைகள் பக்கவாதத்தின் பாதிப்பில் இருந்து மீழ்பவரின் புஜம் மற்றும் கையின் செயல்பாடுகள் குனமடைதலை ஊக்குவிக்கும்?
பின்புலம்
பக்கவாதத்திற்கு பிறகு கை செயல்பாடு (மேல் அவயம் கோளாறுகள்) குறைகள் பொதுவாக காணப்படும். பக்கவாதத்திற்ற்கு பிறகு மேல் அவயத்தை நகர்த்த சிrமப்படுதல், புஜம், கை மற்றும் விரல்கள் ஒத்து இயங்க சிரமப்படுதல், தினசரி வேலைகளான சாப்பிடுதல், உடை உடுத்தல் மற்றும் குளிப்பதற்கு சிரமப்படுதல் ஆகியவை மேல் அவய கோளாறுகளால் உண்டாகும் செயல்பாடு தடங்கல்கள். பக்கவாதத்தினால் மேல் அவய கோளாறுகள் கொண்டவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பல மாதங்களில் இருந்து வருடங்கள் வரை இம்மேல் அவய பிரச்சினைகளுடனே வாழ்கின்றனர். மேல்அவயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது முன்போன்ற நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை நோக்கமாகும். இந்நோக்கத்தை சாத்தியமாக்க பல சிகிச்சைகள் உருவக்கப்படுள்ளன; பல வகையான உடற் பயிற்சிகளை பயன்படுத்தியும் பிரத்தியகமான கருவிகளை பயன்படுத்தியும், பிரத்தியகமான உத்திகளை பயன்படுத்தியும் அல்லது மாத்திரை மூலமாகவோ ஊசி மூலமாகவோ எடுத்துக்கொள்ளும் மருந்தினையும் பயன்படுத்தி மேல் அவய செயல்பாடுகளினை மேம்படுத்தினர்.
பக்கவாததிற்குப் பின் மேல் அவய புனர்வாழ்வு சிகிச்சை பொதுவாக பலவகையான சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது மற்றும் நோயாளிகள் , நோயாளிகளின் பராமரிப்பாளர்கள் மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் ஒத்துழைப்பு பொதுவாக தேவை.
எவ்வகை சிகிச்சை முறை நல்ல பயனளிக்கக் கூடியது என்ற தகவல்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளவும் ஒரு சிகிச்சை முறையை மற்றொரு சிகிச்சை முறையுடன் ஒப்பிட்டு பார்க்கவும் உதவும் வகையில் காக்ரேன் மீள்பார்வை நங்கள் மேற்கொண்டோம். பக்கவாதத்திற்கு பின் மேல் அவய செயல்பாடுகளை மேம்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றிய அனைத்து திட்டமிட்ட திறனாய்வுகளையும் (Systematic Reviews) ஒன்று திரட்ட முடிவுசெய்தோம்.
ஆய்வு பண்புகள்
நாங்கள் பக்கவாதிற்கு பிறகு கை செயல்பாடு மேம்படுத்தும் மருத்துவ முறைகள் பற்றிய காக்ரேன் மற்றும் காக்ரேன் அல்லாத திறனாய்வுகளை தேடினோம். நாங்கள் 40 திட்டமிட்ட திறனாய்வுகளை (19 காக்ரேன் மற்றும் 21காக்ரேன் அல்லாத திறனாய்வுகள் ) இதில் சேர்த்தோம். இந்த ஆதாரங்கள் ஜூன் 2013 முதல் தற்போது வரை
18 வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் பற்றிய திறனாய்வுகளில் சிகிச்சையின் அளவுகள் மற்றும் அளிக்கப்பட்ட சூழ்நிலைகள் பற்றிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திறனாய்வுகளில் தேர்வு செய்யப்பிட்ட நோயாளிகளின் தன்மை (தொடக்க கால மேல் அவய கோளாறுகள் மற்றும் பக்கவாத கடுமை ) பொறுத்து திறனாய்வுகள் மாறுபடுகின்றன. ஆராய்ச்சிகளில் ஈடுபடும் ஒப்பீடு குழுக்களின் தன்மை (கட்டுப்பாட்டு குழுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், சிகிச்சையே அளிக்கப்படாது இருத்தல் , வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட குழுக்கள்) பொருத்தும் மதிப்புரைகள் மாறுபடுகின்றன.
நாங்கள் இந்த திறனாய்வுக்காக 127 ஒப்பீடுகளின் சாரங்களின் விவரங்களை ஆராய்ந்தோம். இவை அனைத்தும் நமக்கு எந்த அளவிற்கு பலவகையான சிகிச்சை முறைகள் மேல் அவய இயல்பான இயக்கத்தையும், மேல் அவய கோளாறுகளையும் மற்றும் தினசரி செயல்களை செய்யும் திறமையும் பாதிக்கின்றன என்று கூறுகின்றன.
முக்கிய முடிவுகள்
தற்போது நடைமுறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எந்த மருத்துவ முறைக்கும் உயர்-தர சான்று தற்போது இல்லை. எவ்வகை சிகிச்சைமுறைகள் மேல் அவய செயல்பாடுகளை மேம்படுத்த ஆற்றல் வாய்ந்தவை என அறிய போதுமான ஆதாரங்கள் இல்லை.
மிதமான-தர ஆதரம் பின்வரும் சிகிச்சைகள் திறன் வாய்ந்ததாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது: கட்டுப்படுத்துவதன் மூலம் தூண்டப்பட்ட இயக்க சிகிச்சை (CIMT) முறை, மன பயிற்சி, கண்ணாடி சிகிச்சை, உணர்ச்சி கோளாறுக்காண சிகிச்சைகள், தோற்ற மெய்மை பயிற்சிகள் (virtual reality), மற்றும் திறனை மேம்படுத்த அதிக அளவு அளிக்கபடும் மீண்டும் மீண்டும் (Repetitive) அளிக்கும் செயல் வழி பயிற்சி. இருபக்க மேல் அவயங்கள் பயிற்சியை விட ஒருபக்க மேல் அவய பயிற்சி ( பக்கவாதம் தாக்கப்பட்ட மேல் அவயம்) பயனளிக்க கூடியது என்று மிதமான - ரக ஆதாரங்கள் கூறுகின்றன.
குறைந்த அளவிலான பயிற்சியை விட அதீத பயிற்சி நல்ல முன்னேற்றத்தை தரும் என சில ஆதாரங்கள் உணர்த்துகின்றன. அனுகூலமான பயிர்ச்சிக்கான அளவு என்ன என்பதை கண்டறிய மேலும் ஆராச்சிகள் தேவைப்படுகின்றன.
இருக்கின்ற அனைத்து திட்டமிட்ட திறனாய்வுகளையும் ஒன்று திரட்டி ஆராய்ந்ததில் எதிகால ஆராய்ச்சிகள எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று தெளிவாக பரிந்துரைக்க நமக்கு உதவுகின்றன இந்த பரிந்துரைகள் யாதனில்: (ஆனால் இவை மட்டுமே அல்ல) CIMT, மன பயிற்சி, கண்ணாடி சிகிச்சை மற்றும் தோற்ற மெய்மை பயிற்சி போன்ற சிகிச்சைகளுக்கு பெரிய அளவிலான சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப் படவேண்டும் பல சிகிச்சை முறைகளுக்கு உயர்தர மற்றும் சமீபத்திய திறனாய்வு மற்றும் பல சிகிச்சை முறைகளுக்கு முதன்மையான ஆராய்ச்சிகள் தேவைபடுகின்றன என்று நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.
சான்றுகளின் தரம்
ஒரு சிசிச்சை முறைக்கு உயர்-தரம் கொண்ட ஆதாரம் உள்ளது என்று நாங்கள் தீர்மானித்தோம் அது, மண்டை ஓடு ஊடே செல்லுதல் மின்சார சிகிச்சை முறை(transcranial direct current stimulation (tDCS). இது ஒரு வகையான மூளை துண்டால் சிகிச்சை, இது தற்போது வழக்கமான சிகிச்சையாக உபயோகிக்கபடுவதில்லை. மண்டை ஓடு ஊடே செல்லுதல் மின்சார சிகிச்சை முறை(transcranial direct current stimulation (tDCS)) பற்றிய நல்ல உயர்ந்த தரமான ஆதாரங்களை ஆராய்ந்த போது இச்சிகிச்சை முறை மக்கள் தினசரி செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவில்லை என்று காட்டுகின்றது .
48 ஒப்பீடுகளை (7 சிகிச்சை முறைகள் பற்றிய) மிதமான -ரக தரமானதாகவும் மற்றும் , 76 ஒப்பீடுகளுக்கு குறைந்த தர அல்லது மிகவும் குறைந்த தரமானதாகவும் என்றும் நாங்கள் தீர்மானித்தோம். ஆதாரங்களின் தரநிலையை மிதமான, குறைந்த தர அல்லது மிகவும் குறைந்த தர என்று குறைக்க காரணங்கள்: குறைந்த எண்ணிக்கையில் ஆராய்ச்சிகள் மற்றும் குறைந்த பங்கேற்பாளர்கள், குறைபாடுடைய முறையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அல்லது ஆராய்ச்சி அறிக்கை குறைபாடுகள், ஆராய்ச்சிகளில் காணும் கணிசமான மாறுபாடுடைய முடிவுகள் மற்றும் மோசமான திறனாய்வு அல்லது அறிக்கை முறைகள்.
மேல் அவயயத்தின் (upperlimb) செயல்பாட்டு திறனை அதிகரிக்கும் மருதுவமுறைகளின் திறன்பாட்டை தெரிந்துகொள்ள குறிப்பாக தற்போது நன்மை பயக்கும் திறன் கொண்ட மிதமான-தரம் ஆதாரம் உள்ளது என்று தெரிவிக்கின்ற மருத்துவமுறைகளுக்கு .உயர்தர ஆதரம் தேவை என்று நாங்கள் முடிவுசெய்தோம்,
மொழிபெயர்ப்பு: சரவணா ஹரி கணேஷ், க.ஹரிஓம் மற்றம் சி.இ.பி.என்.அர் குழு