இங்கு கேள்வி என்ன?
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த ஆயுட்காலம், இதய நோய் உள்ளிட்ட சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பிற்கான சிகிச்சை டையாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு) தேவைப்படலாம். மருத்துவர்களும்,நோயாளிகளும் இதய நோய்களில் இருந்தும் , சிறுநீரக செயலிழப்பிலிருந்தும் பாதுகாக்கும் சிகிச்சையை கண்டறிய விரும்புகிறார்கள். மருத்துவர்கள் மற்றும் மக்கள் இருதரப்பினரும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை முறை மாற்றம் உணவிலும் மாற்றம் மிக முக்கியமாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பின்பற்றக் கூடிய சாத்தியமான வழிகள்,மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சுய -பராமரிப்பு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
நாங்கள் என்ன செய்தோம்?
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டயாலிசிஸ்க்கான சிகிச்சை பெறுபவர்கள்,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள் இவர்கள் அனைவரின் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்ட எல்லா ஆய்வுகளையும் ஒன்றிணைத்தோம்.
நாங்கள் என்ன கண்டுபிடித்தோம்?
1639 நாட்பட்ட சிறுநீரக நோயை உடைய மக்களிடம் உணவில் மாற்றங்கள் அல்லது அறிவுரையின் மூலம் ஆரோக்கியத்தில் மேம்பாடு அடைகின்றனரா என்று நடத்தப்பட்ட 17 ஆய்வுகளைக் கண்டுபிடித்தோம். இதில் மிதமான அல்லது கடுமையான சிறுநீரக நோயை உடைய ஆண்கள் அல்லது பெண்கள் பங்கேற்ற ஆய்வுகள் சேர்க்கப்பட்டது. .உணவில் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள், அதிகளவு கோழி மற்றும் மீன் வகைகள்,உயர்தர கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய்,சில அதிக அளவிலான தானியங்கள், பருப்பு வகைகள் (எ.கா.பீன்ஸ்), குறைந்த அளவிலான சிவப்பு இறைச்சிகள்,சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்பட்டன. நமக்கு கிடைத்த அனைத்து ஆய்வுகளின் முடிவை சேர்த்தபின்பு அவற்றில் நாங்கள் மூன்று முக்கிய விளைவுகளை கவனித்தோம். மரணதிற்கான ஆபத்து, டையாலசிஸ் தேவைப்படும் அளவிற்கான கடுமையான சிறுநீரக நோய்க்கான ஆபத்து, மற்றும் வாழ்க்கைத் தரம். அவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடைய நான்கு ஆய்வுகள் மற்றும் டயாலிசிஸ் செய்துக்கொண்டிருப்பவர்களுடைய மூன்று ஆய்வுகளும் சேர்க்கப்பட்டன.
உணவு முறை மாற்றம் இதய நோய் சிக்கல்களை தடுப்பதைப் பற்றி நிறைய ஆய்வுகள் அளவிடப்படாததால் நமக்கு கிடைத்த ஆய்வுகளின் முடிவில் தெரிகிறது. உணவு முறை மாற்றம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம். சரியான முறையில் உணவுமுறை கட்டுப்பாட்டை பின்பற்றாதவர்கள் அல்லது ஆலேசனைகள் பின்பற்றாதவர்கள் அல்லது ஆரோக்கிய உணவை சாப்பிடாதவர்கள் எதிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற நோய்களால் அதிக அளவிற்கு ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று கண்டோம்.
நாம் எடுத்துக் கொண்ட ஆய்வுகளின் தரத்தின்படி இதே போன்ற முடிவுகளை எதிர்கால ஆய்வுகள் கொடுக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
முடிவுகள்
உணவுமுறை மாற்றங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக இருக்கும் என்று நிச்சயமாக கூற முடியாது.ஏனென்றால் கிடைத்திருக்கும் ஆய்வுகள் இவை பற்றி சரியாக வடிவமைக்கப் படவில்லை .உணவுமுறை மாற்றம் உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குறைக்கலாம் ஆனால் நல்வாழ்விற்கு இந்த தாக்கத்தின் விளைவு நீண்ட நாட்களுக்கு இருக்குமா என்று உறுதியாக கூறவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் உணவுமுறை மாற்றத்தின் விளைவுகளை உறுதியாக கூற மேலும் பெரிய மற்றும் தரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]