சீரற்ற சமவாய்ப்புச் சோதனைகளில் நிறுவப்பட்ட சிகிச்சைகளுக்கு எதிராக புதிய சிகிச்சைகள்

வெவ்வேறு குழுக்களுக்கான சீரற்ற சமவாய்ப்பு ஒதுக்கீடானது, நியாயமான சோதனைகளில் சிகிச்சைகளின் விளைவுகளை ஒப்பிட்டு சிகிச்சை விருப்பங்களின் மத்தியில் விரும்பத்தக்கது எது எனக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது.சிகிச்சை விருப்பங்களில் எது விரும்பத்தக்கதாக இருக்கிறது என்பது பற்றி உண்மையான நிச்சயமற்ற நிலை இருந்தால் மட்டுமே, சீரற்ற சமவாய்ப்பு ஒதுக்கீடானது நெறிமுறையானதாகும்.ஒரு நோயாளியோ அல்லது அவர்களின் ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநரோ, ஒப்பிடப்பட்ட சிகிச்சைகளில் எது விரும்பத்தக்கதாக இருக்கிறது என்பது பற்றி நிச்சயமான நிலையில் இருந்தால், அவர்கள் சீரற்ற சமவாய்ப்பு ஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் தாழ்வானது என நம்பப்படுகிற ஒரு சிகிச்சைக்கு ஒதுக்கப்படும் ஆபத்தை உள்ளடக்கியது.புதிய சிகிச்சைகள், தற்போதிற்கும் (நிலையான) சிகிச்சைகளை விட உயர்வாக இருக்க வேண்டும் என்ற பரவலான நம்பிக்கை உள்ள காரணத்தினால், சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளில் பங்கேற்கலாமா என்பதைப் பற்றி தீர்மானங்களை எடுப்பது மிகவும் கடினமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், மக்கள் இது வழக்கில் இருக்கக் கூடியது என்று நம்புகிறார்கள் என்று புரிகிறது. இது உண்மையாக இருந்தால், எப்படியாகிலும், நிச்சயமற்ற நெறிமுறை என்ற முன்னிபந்தனையை அடிக்கடி உபயோகிக்க முடியாது. "புதிய சிகிச்சைகளை நிறுவப்பட்ட சிகிச்சைகளுடன் சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளில் ஒப்பிடும்போது உயர்வாக காட்டப்பட வேண்டியதற்கான சாத்தியக் கூறுகள் என்ன?" என்கிற இந்த முக்கியமான கேள்வியை இந்த காக்குரேன் ஆராய்ச்சி முறை திறனாய்வானது முகவுரைக்கிறது.இந்த திறனாய்வு சேர்க்கை அடிப்படையை பூர்த்தி செய்த, முற்றிலும் 297,744 நோயாளிகளை பதிவில் கொண்ட 743 சோதனைகளை உள்ளடக்கி பகிரங்கமாக நிதியுதவி பெற்ற நான்கு சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளின் தொடர்ச்சியான தொகுப்பைக் கொண்டது. சராசரியாக, புதிய சிகிச்சைகள் நிறுவப்பட்ட சிகிச்சைகளை விட, முதன்மை விளைவுகளின் இலக்கு மற்றும் ஒட்டுமொத்த உயிர்வாழ்தல் அடிப்படையில் சாதகமான விளைவுகளைப் பெறுவதற்கு மிகக் குறைந்தளவில் கூடுதல் வாய்ப்பை பெற்றிருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். வேறுவிதமாக கூறினால், சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளில் புதிய சிகிச்சைகளை நிறுவப்பட்ட சிகிச்சைகளுடன் ஒப்பிடும் போது, பாதிக்கு மேற்பட்டவை திறன் வாய்ந்ததாகவும், மற்றும் பாதிக்கும் குறைவானவை மோசமானதாகவும் நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். நமது பகுப்பாய்வில் வணிக ஆதரவாளர்கள் மூலம் நிதியுதவி பெற்ற ஆய்வுகளை பகுப்பாய்வில் சேர்க்காததன் காரணமாக, இந்த முடிவு பொது நிதியுதவி பெற்ற சோதனைகளுக்குப் பொருந்தும். இம்முடிவுகள் சீரற்ற சமவாய்ப்பு ஒதுக்கீடு பற்றிய நெறிமுறை முன்நிபந்தனைகளுக்கு இசைவானதாக இருக்கிறது. சீரற்ற சோதனைகளில் மக்கள் சேர்க்கப்படும் போது, சீரற்ற சோதனைகளில் ஒப்பிடப்படும் சிகிச்சைகளில் எந்த சிகிச்சை உயர்ந்ததாக நிரூபிக்கும் என்ற உண்மையான நிச்சயமற்ற நிலையின் காரணமாக முன்கூட்டியே முடிவுகளை கணிக்க முடியாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information