எலும்பு முறிவுக்கு பின் திசு மற்றும் எலும்பு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தோலை ஊடுருவி விட்ட எலும்பு முறிவுகள் 'திறந்த' அல்லது 'கூட்டு' முறிவு எனப்படும். முறிந்த எலும்பு துண்டுகள் தோலை விட்டு வெளி ஏறாத போது அது 'சாதாரண' அல்லது 'மூடிய' எலும்பு முறிவு எனப்படும். அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும் மூடிய எலும்பு முறிவுகளில் திறக்கப்பட்ட தோல் வாயிலாக நோய் கிருமிகள் நுழைந்து தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. கால் தொடை எலும்பு போன்ற நீண்ட எலும்புகள் அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்யப்படும் போது ஏற்படும் இத்தகைய மருத்துவமனையில்-பெற்ற (hospital acquired) தொற்றுகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். ஸ்டெஃபிலோகோக்கஸ் போன்ற நோய் கிருமிகள் ஊடுருவதை தடுக்க கடந்த 1970 ஆம் ஆண்டிலிருந்து அறுவை சிகிச்சை செய்யப்படும் போது நுண்ணுயிர் கொல்லிகள் (antibiotics) கொடுக்கப்படுவது வழக்கம். இந்த திறணாய்வில் 8447 பேர் பங்கேர்பார்கள் கொண்ட 23 ஆராய்ச்சிகளை கொண்டது. அவ்வாறு அளிக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகள் (antibiotics) மருத்துவமனை தொற்றுக்களை மட்டுமல்லாது மார்பக மற்றும் சிறுநீரக தொற்றுகளைய்ம் தவிர்த்துள்ளது என்பதை இந்த திறணாய்வு உறுதி செய்கிறது. அறுவை சிகிச்சை ஆரம்பிக்கும் தருணத்திலிருந்து தோல் புண்கள் இணையும் வரை வீரியதுடன் இயங்கும் நுண்ணுயிர் கொல்லிகள் (antibiotics) ஒரு அளவையாகவொ (single dose) அல்லது பல அளவைகளாகவோ கொடுப்பதில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. இத்தகைய மருத்துவ முறைகள், வயிற்று கோளாறுகள் மற்றும் தோல் எதிர்வினை போன்ற மருந்து ஒவ்வா எதிர் விளைவுகளை கொடுக்கிறதா என்பதை அறிய இந்த திறனாய்வில் போதிய தரவுகள் இல்லை.
மொழிபெயர்ப்பு:இர. ரவி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு