பொதுமக்கள் மற்றும் முதன்மை அல்லது இரண்டாம் கட்ட மருத்துவ படிநிலை பராமரிப்பின் கீழ் வரும் “நாள்பட்ட கீழ்முதுகுவலி” (LBP) நோயாளிகளின் வலி நிவராணம் மற்றும் உடற்செயல்பாட்டிற்கு, நடுவு சீராக்க பயிலகங்கள்,மற்ற வழக்கமான நடைமுறை சிகிச்சைகளை காட்டிலும் செயல்திறம் மிக்கது என்பதற்கு மித அளவிலான ஆதாரமுள்ள நடுநிலை சான்றுகள் உள்ளது. வலி நிவராணம்,உடற்செயல்பாடு மற்றும் பிணிக்குப்பின் பணி திரும்புதல் போன்றவைகளில்,நடுவு சீராக்க பயிலகங்களின் மேன்மையான பயன்பாடு என்பது, வெற்று சிகிச்சைமுறை (placebo),மருத்துவ சிகிச்சை காத்திருப்பு பட்டியலினருக்கான சிகிச்சயின்மைமுறையை விட திறனுள்ளது என்பதற்கு முரண்பட்ட சர்ச்சைக்குரிய சான்றுகளே இருக்கின்றன.
“நாள்பட்ட கீழ்முதுகுவலி” (LBP) நோயாளிகளின் வலி நிவராணம்,உடற்செயல்பாடு மற்றும் பிணிக்குப்பின் பணி திரும்புல் நிலைப்பாடு போன்றவைகளுக்கு தொழில்சார் முறைமையில் அமைக்கப்பட்ட நடுவு சீராக்க பயிலகங்களை ஏனையசிகிச்சை முறைகளான உடற்பயிற்சிகள், புறவிசையியக்க மூட்டசைவு,தசைச்சூழ்சவ்வு இளக்க சிகிச்சை அல்லது அறிவுரைகள், வெற்று சிகிச்சைமுறை, மருத்துவ சிகிச்சை காத்திருப்பு பட்டியலினருக்கான சிகிச்சையின்மைமுறை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுபார்க்கும் போது குறுகிய மற்றும் இடைநிலை கால நிவாரணங்களுக்கு தொழில்சார் முறைமையில் அமைக்கப்பட்ட நடுவு சீராக்க பயிலகங்களே மேற்குறிப்பிட்ட பிற சிகிச்சை முறைகளை விட பயன்மிக்கது என்பதற்கு மித அளவீட்டிலான ஆதார சான்றுகள் உள்ளது.
மொழி பெயர்ப்பு: வினோத் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு