மூளையில் தமனியின் இரத்த ஓட்டத்தைக் குருதியுறை தடுப்பதால் பக்கவாதம் நிகழ்கிறது. பக்கவாதத்திற்குப் பின் நல்ல மீட்சிபெறும் வாய்ப்பை அதிகரிக்க குருதியுறை கரைக்கும் (இரத்த உறைவுச் சிதைப்பி சிகிச்சை) சிகிச்சை உதவும். வெவ்வேறு குருதியுறை-கரைக்கும் மருந்துகளின் பயன்களுக்கு இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளனவா என்று அறிவதே இந்த திறனாய்வின் நோக்கம். அதே மருந்தை வேறுபட்ட அளவிலோ அல்லது செலுத்தும் வழிகளை (தமனி அல்லது சிரை வழியாக) மாற்றியோ கொடுத்தால் விளைவில் வேறுபாடு உள்ளனவா என்று அறிவதே இந்த திறனாய்வின் மற்றொரு நோக்கமாகும் . 2527 பங்கேற்பாளர்கள் கொண்ட 20 ஆய்வுகள் அடங்கிய இந்த திறனாய்வு குருதி உறைவுச் சிதைப்பி சிறிய அளவுகளில் அளிப்பது மூளையில் கடுமையான இரத்தக்கசிவு ஏற்படுவதைக் குறைக்கும் என்பதற்கான சில ஆதாரங்களைக் கண்டறிந்தது . இருப்பினும், குறைந்த அளவு அளிப்பது அதிக அளவு அளிப்பதைப் போல பெரிய அளவில் முன்னேற்றம் தருமா என்பது சரியாக தெரியவில்லை. எந்த ஒரு இரத்த உறைவுச் சிதைப்பி காரணியும் வேறு எந்த காரணியைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளது என்று கூற எங்களுக்கு எந்த ஆதாரமும் கிட்டவில்லை. மேலும் தமனிவழி மருந்து அளிப்பது சிரை வழி அளிப்பதை விட சிறந்தது என்று ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே, எந்த மருந்து அல்லது மருந்தின் அளவு அல்லது குருதி உறைவுச் சிதைப்பி செலுத்த சிறந்த வழிகள் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க பெரிய அளவிலான சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் அதிகம் தேவைப்படுகின்றன. தற்போது, பல நாடுகளில் உரிமம் பெற்றுள்ள, ஆர்டி-பிஎ (rt-PA) தான் சிறந்த நடைமுறை என்று கருதப்பட வேண்டும்.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு