மூளை தமனியில் திடீர் அடைப்பு காரணமாக ஏற்படும் பக்கவாதம் வந்தவர்களுக்கு, மற்றொரு சாவுக்குரிய பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்துக்கூறு அதிகம். இரத்த வட்டுகளுக்கு எதிரான மருந்துகள் (ஆஸ்பிரின் போன்ற) கொண்டு சிகிச்சை அளிப்பது நிச்சயமாக இந்த ஆபத்தை குறைக்கிறது. இரத்த நீர்ம மிகைப்பு சிகிச்சை (வைட்டமின் கே எதிர்மருந்துகள் முலம் உறைவு எதிர்ப்பு) கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என்று நம்பப்பட்டது. மீண்டும் மீண்டும் பக்கவாதம் வராமல் தடுக்கும் உறைவெதிர்ப்பி மருந்துகளை இரத்த வட்டுகளுக்கு எதிரான மருந்துகளுடன் ஒப்பிட்ட 5762 பங்கேற்பாளர்கள் கொண்ட 8 ஆய்வுகளை நாங்கள் மறுஆய்வு செய்தோம். இதில் குறைந்த வீரியம் உள்ள உறைவெதிர்ப்பி மருந்துகளை ஆஸ்பிரினோடு ஒப்பிடும்போது எந்த பயனும் இல்லை என்றும் அதிக வீரியம் உள்ள உறைவெதிர்ப்பி மருந்துகளால் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்துக்கூறு உள்ளது என்றும் தெரியவந்தது.
மொழிபெயர்ப்பாளர்: கா.ஹரிஓம், மற்றும் சி.இ.பி.என்.அர் குழு