பாத சீழ்ப்புண்கள் மற்றும் உறுப்பு நீக்கங்கள் ஆகியவற்றை குறைப்பதற்காக பாதப் பராமரிப்பு பற்றி நீரிழிவு நோய் கொண்ட மக்களுக்கு விளக்கக் கல்வி அளித்தல்

பாத சீழ்ப்புண்கள் (திறந்திருக்கும் புண்கள்) நீரிழிவு நோய் கொண்டவர்களில் பொதுவாக காணப்படுகிறது. குறிப்பாக, நரம்புப் பிரச்னைகள் (புற நரம்புக் கோளாறு) , இரத்த ஓட்டப் பிரச்னைகள் (புற இரத்த நாள நோய்) அல்லது இரண்டிலும் பிரச்னை உள்ளவர்களில் காணப்படுகிறது. நீரிழிவு நோய் காரணமாக பாத சீழ்ப்புண்கள் கொண்ட மக்களுக்கு சில நேரங்களில் உறுப்பு நீக்கம் (அவயவத்தின் ஒரு பகுதியை நீக்கும் அறுவை சிகிச்சை) தேவைப்படும். பாத சீழ்ப்புண்கள் உடல் சார்ந்த இயலாமை மற்றும் வாழ்க்கைத் தர இழப்பு ஆகியவற்றுக்கு வழி வகுப்பதோடல்லாமல், பொருளாதார சுமையையும் (மருத்துவ பராமரிப்பு செலவுகள், தொழில்துறை இயலாமை) ஏற்படுத்தும். ஆகையால், பாத சீழ்ப்புண்கள் நிகழாமல் தடுப்பதே நோக்கமாகிறது. உயர்- நிலை ஆய்வுகளைக் கொண்ட இந்த திறனாய்வு, நீரிழிவு நோய் கொண்ட மக்களுக்கு அவர்களின் பாதங்களை பராமரிப்பதற்கான தேவையை பற்றி விளக்கக் கல்வி அளிப்பதன் மூலம் பாதப் பராமரிப்பு பற்றிய அறிவு மற்றும் நடத்தை குறுகிய-காலக்கட்டம் வரைக்கும் மேம்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளது. எந்த கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், விளக்கக் கல்வி மட்டுமே புண்கள் மற்றும் உறுப்பு நீக்கம் நிகழ்வுகளைக் பயனுள்ள வகையில் குறைக்கும் என்பதற்கு பற்றாக்குறையான ஆதாரமே உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information