ஹெச்ஐவியுடன் வாழும் வயது வந்தவர்களில், ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது ஏரோபிக் உடற்பயிற்சியுடன் எதிர்ப்பாற்றல் உடற்பயிற்சியை குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு, ஐந்து வாரங்களுக்கு குறைந்தது ஒவ்வொரு வாரமும் மூன்று தடவையாவது செய்வது பாதுகாப்பானதாகும் மற்றும் உடற்திறன், உடற்கட்டு, மற்றும் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்தக் கூடியதாகும்.
உடற்பயிற்சியானது, உடற்திறன், ஒட்டுமொத்த நலன் மற்றும் உடற்கட்டை மேம்படுத்துவதற்கு ஹெச்ஐவியுடன் வாழும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஹெச்ஐவியின் ஆரோக்கியம்-சார்ந்த மற்றும் அதின் தொடர்புடைய சிகிச்சைகளின் பின்விளைவுகளை தடுப்பதற்கு ஒரு யுக்தியாக அது கையாளப்படுகிறது. பதினான்கு மருத்துவ சோதனைகளின் இந்த திறனாய்வு, நிலையான அல்லது இடைவெளி கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது நிலையான ஏரோபிக் உடற்பயிற்சியோடு படிப்படியான தசை எதிர்பாற்றல் உடற்பயிற்சியை குறைந்த பட்சம் 20 நிமிடங்கள், வாரம் மூன்று முறைக்கு, ஐந்து வாரங்களுக்காவது செய்வது பாதுகாப்பானதாகவும் மற்றும் உடற்திறன், உடற்கட்டு, மற்றும் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்துவதாகவும் கண்டது. ஹெச்ஐவியுடன் வாழும் பெண்கள் மற்றும் வயதானவர்கள், மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை பாதியிலே விட்டவர்கள் போன்ற குறைந்தளவே விவரிக்கப்பட்ட மக்கள் குழுக்களில் ஆதாரத்தை சிறப்பான முறையில் மதிப்பிட அதிகமான உயர்-தர ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்